மனைவியின் கொடுமையால் பரிதவிக்கும் கணவர் வீடியோ: குடும்ப வன்முறை, அடிதடி அராஜகம் போன்ற சம்பவங்கள் பெண்களுக்கு எதிராக நடப்பது குறைந்து வரும் காலத்தில், தற்போது ஒரு வன்முறை வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. வீட்டின் சிசிடிவியில் இருந்து எடுக்கப்பட்ட இந்த காட்சி பல கேள்விகளை எழுப்புகிறது. குடும்பத்தில் ஆண்களும் அடி வாங்கும் வீடியோக்கள் இணையத்தில் அண்மைக் காலங்களில் அதிகமாக பகிரப்படுகிறது. இருந்தபோதிலும், இதுபோன்ற ஒரு வீடியோ இணையத்தை சீற்றம் கொள்ளச் செய்கிறது.
வைரலாகும் வீடியோவில், தனது கணவர் ‘தாமதமாக வீட்டிற்கு வந்ததால்’ அவரை மிகவும் மோசமாக உதைத்து அடிக்கிறார். இந்த வீடியோ கிளிப் வைரலாவதைப் போலவே பல வைரலாகும் கேள்விகளையும் எழுப்புகிறது. இந்த வீடியோ சமூக ஊடக தளமான X இல் கிரேஸி கிளிப்ஸ் @crazyclipsonly என்ற வெளியாகியுள்ளது.
Wife beats husband as soon as he gets home pic.twitter.com/JaQX6h9iBb
— Crazy Clips (@crazyclipsonly) November 29, 2023
“வீட்டிற்கு வந்தவுடன் மனைவி கணவனை அடிக்கிறாள்” என்று கவி தலைப்பிடப்பட்டிருந்தது. வைரல் வீடியோவை பாருங்கள்:nbsp; வீட்டிற்கு வந்த கணவனை மனைவி அடித்துள்ளார்.
மேலும் படிக்க | கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் இப்படிப்பட்ட ரிஸ்க் எடுக்கமாட்டேன்! அலற வைக்கும் வீடியோ
நவம்பர் 29, அதாவது நேற்று பதிவிடப்பட்ட இந்த வீடியோ ஆன்லைனில் வெளிவந்தவுடன் சமூக ஊடகங்களில் வைரலாக பரவத் தொடங்கியது. பெரும்பாலான மக்கள் குடும்ப வன்முறை என்பது ஆண்களுக்கு எதிராகவும் நடக்கலாம் என்று சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கேட்கும் நிலையில், என்ன தான் தப்பு செய்திருந்தாலும் இப்படி போடு அடிக்கலாமா என்று முரட்டு மனைவியின் செயல்களுக்காக அவரைத் கண்டித்தார்கள். இந்த வீடியோ நேற்று பகிரப்பட்டது முதல் 22 மில்லியன் பார்வைகளை குவித்தது.
கணவர் கேமராவை வைத்திருப்பது மனைவிக்கு தெரிந்திருக்காது. இது பல நாள் கதையாக இருந்திருக்கலாம், இந்த அடிஉதையில் இருந்து விடுபட உறுதியான ஆதாரத்தை உருவாக்குவதற்கு இந்த வீடியோ பயன்படலாம். கொடுமைக்கார மனைவியுடன் இப்படி சித்திவதை அனுபவிப்பதைவிட, மோசமான உறவில் இருந்து வெளியேறலாம் என்று ஒருவர் கூறினார்.
மேலும் படிக்க | இந்த வயசிலயே இப்படியா? இணையத்தை அதிர வைத்த சூப்பர் டான்சர் பாட்டி வீடியோ வைரல்
பறந்து பறந்து இப்படி அடிக்கிறாளே, கணவர் என்ன வடிவேலா, இல்லை மனைவி தான் கோவை சரளாவா? என்று தமிழ் சினிமாவில் ஒரு பிரபல காமெடி காட்சியை ஒருவர் குறிப்பிடுகிறார். ஆனால், திரைப்படத்தில் நகைச்சுவையாக சொல்லப்பட்ட விஷயம், உண்மையில் நடந்தால் எப்படி இருக்கும்?
உண்மையில் ஆண்களுக்கு எதிராக குடும்ப வன்முறை நடைபெறுகிறது, அவர்களில் பெரும்பாலோர் அதைப் வெளியே சொல்ல வெட்கப்படுகிறார்கள். பிறர் கேலி செய்வார்கள் என்று நினைத்து அமைதியாக இருந்தாலும், ஒரு கட்டத்தில் கொடுமையை தவிர்க்க இப்படி வீடியோ எடுத்து வைத்துக் கொள்வது, தவறாக குற்றச்சாட்டப்படுவதை தவிர்க்கும் என்றும் நெட்டிசன்கள் கருத்து சொல்கிறார்கள்.
வைரலாகும் வீடியோ நவம்பர் 29அன்று பகிரப்பட்டது. இதுவரை லட்சக்கணக்கானவர்கள் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர்.
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ