வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் அதிக ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் இன்ஃப்ளூயசன்சர்கள் அதிகமாக உள்ள இந்த காலத்தில் அதிக அளவிலானோர் டிக்டோக், இன்ஸ்டாகிராம் ரீல்கள் மற்றும் யூடியூப் ரீல்ஸுகளைப் பதிவுசெய்வதைப் பார்ப்பது சாதாரண விஷயமாக உள்ளது. இப்படி உருவாக்கப்படும் வீடியோக்களில் நடன வீடிய்யோக்களுக்கு அதிக மவுசு உள்ளது. இவற்றுக்கு அதிக வியூஸ்களும் கிடைக்கின்றன. இதன் காரணமாக அந்த சமயத்தில் டிரெண்டாக இருக்கும் பாடல்கள் மற்றும் நடன அசைவுகளில் பெரும்பாலான நெட்டிசன்கள் தங்கள் நடனத்தை அமைக்கிறார்கள். 


தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ இணையவாசிகளை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது. ஒரு பெண், பசுவின் முன் நடன ரீல் செய்துகொண்டிருப்பதை இந்த வீடியோவில் காண முடிகின்றது. ஆனால், பசுவிற்கு இது சிறிதும் பிடிக்கவில்லை. எரிச்சலடைந்து பசு செய்யும் செயலை பார்த்தால் யாராலும் சிரிக்காமல் இருக்க முடியாது. 


மேலும் படிக்க | மிக அருகில் வந்த ராட்சத பாம்பு, தப்பியதா குழந்தை? கதிகலங்க வைக்கும் வைரல் வீடியோ 


வீடியோவில், டி-சர்ட் மற்றும் டிராக் பேண்ட் அணிந்த ஒரு பெண் ஒரு பசுவிற்கு முன்னால் வீடியோ எடுத்துக்கொண்டிருப்பதை காண முடிகின்றது. செலினா கோமஸின் சால் டவுன் பாடலுக்கு வைரலாகி டிரெண்டிங்கில் இருக்கும் ஸ்டெப்ஸ்களை அவர் போட்டுக்கொண்டு இருக்கிறார். 


தான் அமைதியாக இருக்க ஒரு இடத்திற்கு வந்தால், அங்கு அந்த பெண் வந்து தன்னை படுத்துவது மாட்டுக்கு பிடிக்கவில்லை. மாடு தன் பொறுமையை இழந்துவிடுகிறது. இதனால் அது கடுப்பாகி அதற்கு கோபம் வருகிறது. 


பொறுமை இழந்த மாடு அந்த பெண்ணை தாக்க அவரை நோக்கி ஓடுகிறது. ஆனால், நல்ல வேளையாக அவர் சரியான நேரத்தில் தப்பித்து ஓடி விடுகிறார். பசுவை தன் நடனத்தின் மூலம் பாடாய் படுத்திய பெண்ணின் நிலை பலருக்கு சிரிப்பை வரவழைக்கிறது.  


பெண்ணிடம் கோபம் கொண்ட மாட்டின் வீடியோவை இங்கே காணலாம்: 



இந்த வீடியோவை ‘rjkisnaa’  என்ற பயனர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இதன் பின்னணியில் இதற்கு ஏற்ற ஆடியோவையும் அவர் இணைத்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களும் 253k லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகின்றனர். 


மேலும் படிக்க | தெருவில் ஆடிய கோமாளிகளை தெறிக்கவிட்ட தெருநாய் வீடியோ வைரல் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ