வைரல் வீடியோ: சமூக ஊடகங்களில் பல வீடியோக்கள் வைரலாகின்றன. இது போன்ற வீடியோக்களைப் பார்ப்பதற்காக இணைய உலகில் மக்கள் எப்போதும் இணைந்திருக்கின்றனர்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையத்தில் வைரலாகும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைத்தாலும் பல சிந்திக்கவும் வைக்கின்றன. ஆச்சரியங்களை அள்ளித் தெளிக்கும் வீடியோக்கள் அசரவும் செய்கின்றன. நம்ப முடியாதவற்றுக்கும் உலகில் இடம் உண்டு என்பதை புரிய வைக்கின்றன.


இப்படி நவரசங்களையும் கொடுக்கும் இணைய உலகில் விலங்குகளின் அடிதடி வீடியோக்களும், அட்டாக் வீடியோக்களும் பிரபலமானவை.


சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகும் ஒரு வீடியோவில், நீர் குடிக்கச் செல்லும் சிறுத்தையை திடீரென தாக்கும் முதலையின் வீடியோ பலராலும் பார்க்கப்படுகிறது.


பட்டையைக் கிளப்பும் அந்த சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.


மேலும் படிக்க | ரயில் முன் குதித்த சிறுவனை பாய்ந்து காப்பாற்றிய போலீஸ்! வைரல் வீடியோ! 


சில விலங்குகள் சிறுத்தையையும் சீண்டிப்பார்க்கின்றன. சீறிப் பாயும் சிறுத்தையையும் தனது வாயால் கடித்துக் குதறும் முதலை தனது இரையை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. 


பெரும்பாலும் தண்ணீரிலேயே இருக்கும் முதலை,சிறுத்தையை எதிர்பாராத நேரத்தில் தாக்கியதும் திகைத்த சிறுத்தை என்ன செய்தது? சீறியதா சிறுத்தை, முழுங்கியதா முதலை? வீடியோவைப் பாருங்கள்:  


 



முதலையின் அதிரடி அட்டாக் 


சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ-வில், முதலை ஆற்றில் தண்ணீர் குடிக்கச் செல்வதை காண முடிகின்றது. அது கவனமாக அங்கும் இங்கும் பார்க்கும்போது எந்தவித வித்தியாசமும் தெரியவில்லை. ஆனால் திடீரென நீரில் இருந்து சுனாமி போல எழுந்து கணப் பொழுதில் சிறுத்தையை தாக்குகிறது முதலை.  


முதலைகள் தண்ணீரில் வாழும் உயிரினங்களில் மிகவும் ஆபத்தான உயிரினங்களாகக் கருதப்படுகின்றன. தண்ணீருக்கு வெளியேயும் தாக்கும் திறமை இருந்தாலும், நீருக்கும் அதன் வேட்டையாடும் அளவு வேகம், நிலத்தில் இருப்பதில்லை.


சிங்கம், யானை, சிறுத்தை போன்ற விலங்குகளுடன் முதலைகள் தண்ணீரில் மோதும் இதுபோன்ற பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் காணப்படுகின்றன.


தனது இரையை விழுங்கும் அளவு வலுவான தாடைகளை கொண்டிருப்பது முதலையின் சிறப்பு. தற்போது அதை நிரூபிக்கும் இந்த வீடியோ பலராலும் விரும்பி பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | பாம்பு வாலை பிடித்து விளையாடும் சிறுவன், நடுங்க வைக்கும் வீடியோ 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR