கூட்டாளியே துரோகியான சோகம்; புலியிடம் சிக்கி சின்னாபின்னமான எருது..!!

இணைய உலகில், அன்றாடம் பகிரப்படும் ஆயிரக்கணக்கான பல்வேறு வகையான வீடியோக்களில், ஆச்சருயத்தை அல்லது திகிலை உண்டாக்கும் வீடியோக்கள் வீடியோக்கள் என்றால், விரைவில் வைரலாவதைக் காணலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 24, 2022, 03:28 PM IST
கூட்டாளியே துரோகியான சோகம்; புலியிடம் சிக்கி சின்னாபின்னமான எருது..!! title=

இணைய உலகில், அன்றாடம் பகிரப்படும் ஆயிரக்கணக்கான பல்வேறு வகையான வீடியோக்களில், ஆச்சருயத்தை அல்லது திகிலை உண்டாக்கும் வீடியோக்கள் வீடியோக்கள் என்றால், விரைவில் வைரலாவதைக் காணலாம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. 

பொதுவாக, காட்டில் வலுவான ஒரு சிங்கம் அல்லது புலி மற்றொரு மிருகத்தைத் தாக்கும் போது, ​​அதன் கூட்டாளி அதனை காப்பாற்ற எல்லா முயற்சிகளையும் செய்யும். ஆனால் தற்போது வைரலாகி வரும் வீடியோவில், தனது கூட்டாளி சிக்கலில் ஆழ்த்தி, அது வேட்டை விலங்கின் கையில் சிக்கி சின்னாபின்னமாக காரணமாகிவிட்டது அதன் கூட்டாளி. 

மேலும் படிக்க | Viral Video: அஸ்ஸாமில் சாலையை ஹாய்யாக கடந்து சென்ற பெரிய்ய்ய்ய மலைப்பாம்பு..!!

புலி ஒன்று எருமையை வேட்டையாட முயற்சிப்பதை இந்த வீடியோவில் காணலாம். அப்போது எருமையின் கூட்டாளி அங்கு வந்து, அதனைக் காப்பாற்றுவதற்குப் பதிலாக, அவரை அடித்து புலியிடம் தள்லி விடுவதைக் காணலாம். இந்த  வனவிலங்கு சண்டை வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

வைரலாகி வரும் இந்த வீடியோவில், காட்டில் எருமையை புலி ஒன்று தாக்குவதைக் காணமுடிகிறது. எருமை அதன் பிடியிலிருந்து விடுபட முயற்சி செய்து ஓரளவு வெற்றியும் பெறுகிறது. ஆனால் அதே சமயம் இன்னொரு எருமை வந்து அதை எட்டி உதைத்து, புலியை நோக்கி தள்லி விடுகிறது. இதுமட்டுமின்றி எருமை தொடர்ந்து தனது நண்பரை தாக்கிக்கொண்டே இருக்கிறது. இரண்டு எருமை மாடுகளின் இந்த சண்டையில் புலிக்கு வேட்டையாடுவது சுலபமாகிறது.

வீடியோவை இங்கே காணலாம்:

இந்த வீடியோ animals.energy என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க |  Snake Vs Rabbit: தன்னை சீண்டிய முயலை பந்தாடிய பாம்பு - வைரல் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News