பாம்பு வாலை பிடித்து விளையாடும் சிறுவன், நடுங்க வைக்கும் வீடியோ

Snake Video: சமீப காலமாக சமூக ஊடகங்களில் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன, அவற்றில் பாம்பு மற்றும் குழந்தையின் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 25, 2022, 08:36 AM IST
  • திடீரென்று குழந்தை பாம்பின் வாலைப் பிடிக்கத் தொடங்கினார்
  • பதற்றமில்லாமல் வாலைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தான்.
  • இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
பாம்பு வாலை பிடித்து விளையாடும் சிறுவன், நடுங்க வைக்கும் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் பாம்புகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது. அதிலும் பாம்பு பிடிப்பவர்களின் வீடியோக்கள் அடிக்கடி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது. மிகச் சிலருக்கே, பாம்புக்கு அருகில் இருப்பதற்கும், அதை பிடித்து தங்கள் கட்டுக்குள் கொண்டு வருவதற்கும் தைரியம் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு துணிச்சலான ஒரு சிறுமியின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது. 

மேலும் படிக்க | கவுண்டமணி பாணியில் எட்டி உதைத்த குரங்கு! வைரலாகும் வீடியோ! 

இதில் ஒரு சிறுமி பாம்பின் வாலை எளிதாகப் பிடிப்பதை காணலாம். 5 அடி நீளமுள்ள பாம்புடன் குழந்தை விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இருப்பினும், இந்த கவனக்குறைவு குழந்தைக்கு மிகவும் ஆபத்தானது. 5 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று ஊர்ந்து திடீரென சாலையில் வந்தது. அப்போது ஒரு சிறு குழந்தையின் கண்ணில் இந்த பாம்பு படுகிறது. பின்னர் குழந்தை பாம்புடன் விளையாடத் தொடங்குகிறது. அவர் அந்த பாம்பை மீண்டும் மீண்டும் வாலைப் பிடித்து இழுக்கும் காட்சியை நாம் இந்த வீடியோவில் காணலாம்.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

 

இந்த வீடியோ rasal_viper என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த சமூக வலைதளவாசிகள் பல வித கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள். பலருக்கு இந்த பாம்பை பார்த்தால் நம்பும் வகையில் இல்லை. இது உண்மையான பாம்புதானா என பலர் கேள்வி கேட்டு வருகிறார்கள். 

இந்த வீடியோவுக்கு இதுவரை லட்சக்கணக்கான வியூஸ்கள் கிடைத்துள்ளன. இதற்கு ஆயிரக்கணக்கான லைக்குகளும் கிடைத்துள்ளன. 

மேலும் படிக்க | மணமகளின் வேற லெவல் குத்தாட்டம்: வாயடைத்து போன மணமகன், வைரலான வீடியோ 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News