வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதலைகள் அதிக ஆக்ரோஷ குணம் கொண்ட மிருகங்களாக கருதப்படுகின்றன. இவை மாமிச உண்ணிகள், அதாவது அவை இறைச்சியை மட்டுமே உண்கின்றன. காடுகளில், அவை மீன், பறவைகள், தவளைகள் மற்றும் ஓட்டுமீன்கள் ஆகியவற்றை விருந்தாக்கிக்கொள்வதுண்டு. சில சந்தர்ப்பங்களில், இவை இன்னும் கொடூரமாக மாறி ஒன்றை ஒன்று உண்பதும் உண்டு. உண்ண உணவு கிடைக்காதபோது, எந்த இரையும் அகப்படாதபோது, ​​உயிர்வாழ்வதற்கு முதலைகள் இப்படி செய்வதுண்டு. 


பொதுவாக வயதான முதலைகள் ஒன்றை ஒன்று உண்பதில்லை. ஏனென்றால் அவை மிகவும் பெரியதாகவும் கடினமானதாகவும் இருக்கும். ஆகையால், பெரிய முதலைகள் சிறிய முதலைகளை அதிகம் வேட்டையாடும். இது பார்ப்பதற்கும் கேட்பதற்கும் மிகவும் கொடுமையான ஒரு விஷயமாகும். தாயே குழந்தையை உண்ணும் அவலத்தை நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது, ஆனால் முதலைகளின் உலகின் இது நடக்கிறது. 


தென்னாப்பிரிக்காவில், இப்படிப்பட்ட ஒரு அரிய காட்சி காணப்பட்டது. வயது முதிர்ந்த முதலை ஒன்று இளைய முதலைக் குழந்தையை வேட்டையாடும் காட்சி கேமராவில் பதிவானது. இந்த அசாதாரண காட்சியை க்ரூகர் தேசிய பூங்காவில் மார்ஸ் ஜேக்கப்ஸ் மற்றும் ஸ்டீபன் காங்கிசர் ஆகியோர் கேமராவில் படம் பிடித்தனர். 


மேலும் படிக்க | எரிமலைக்குள் மனிதன் விழுந்தால் என்ன நடக்கும்? நெஞ்சை பதைபதைக்கச் செய்யும் வீடியோ! 


இது கடந்த ஆண்டு யூடியூப்பில் வெளியிடப்பட்டது. எனினும், இந்த வீடியோ தற்போது மீண்டும் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளது. வைரலான வீடியோ இதுவரை, 26.5 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களைப் பெற்றுள்ளது.



இந்த வீடியோவில், வயது முதிர்ந்த முதலை ஒன்று, குட்டி முதலையின் வாலைக் கடிப்பதையும், அதைப் பிடிக்க முயற்சிப்பதையும் காண முடிகிறது. சிறிய முதலை ஒரு நொடி நழுவி விடுகிறது, ஆனால் வயதான முதலை அதன் பற்களை குட்டி முதலையின் உடலில் ஆழமாக கடித்து, அதை உண்ண தண்ணீருக்கு அடியில் இழுத்துச்செல்கிறது. 


இந்த அரிய வீடியோவை பார்த்த இணையவாசிகள் அதிர்ச்சியில் உள்ளனர். இது பலரது மனதை பதற வைத்துள்ளது. இதற்கு இணையவாசிகள் பலவித கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள். 


‘தாய் தன்னை இரையாக்குவது தெரிந்து அந்த சின்ன முதலை எழுப்பும் ஒலிகள் பரிதாபமாக உள்ளன’ என எழுதியுள்ள ஒரு பயனர் அழும் எமோஜிகளை பகிர்ந்துள்ளார். ‘முதலையாக இருந்தாலும், இது கொடூரமான செயல். பசி அனைத்தையும் மறக்க வைக்குமா?’ என ஒருவர் தனது வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளார். 


மேலும் படிக்க | முழு Python பாம்பை ஒரு நொடியில் விழுங்கிய மற்றொரு மலைப்பாம்பு: வீடியோ வைரல் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ