என்னைய தாண்டி எப்படி போறேன்னு பார்க்கலாம்! வழிமறித்த காட்டு யானை!

உதகை கல்லட்டி மலை பாதையில் சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை வழிமறித்த ஒற்றைக் காட்டு யானையால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர்.  

Written by - RK Spark | Last Updated : Nov 28, 2022, 08:04 AM IST
  • சுற்றுலா பயணிகளை வழிமறித்த காட்டு யானை.
  • நீண்ட நேரம் சாலையில் நின்றதால் போக்குவரத்து பாதிப்பு.
  • யானையால் சுற்றுலா அச்சம்.
என்னைய தாண்டி எப்படி போறேன்னு பார்க்கலாம்! வழிமறித்த காட்டு யானை!  title=

உதகையிலிருந்து முதுமலை புலிகள் காப்பகத்திற்கு செல்லக்கூடிய கல்லட்டி மலைப்பாதையில் நாள்தோறும் கர்நாடக கேரளா பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன.  36 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட கல்லட்டி மலைப்பாதை அடர்ந்த வனப்பகுதியை கொண்டதாகும்.  மலைப்பாதையில் அவ்வப்போது யானை, சிறுத்தை ,கரடி ,காட்டுமாடு, உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படும் குறிப்பாக இரவு நேரங்களில் யானைகள் சாலையில் திடீரென உலா வருவது தொடர்ந்து வருகிறது.

மேலும் படிக்க | புதுசு கண்ணா புதுசு... ரயில் என்ஜினை திருடிச்சென்ற திருடர்கள் - திடுக்கிட்ட ரயில்வே!

இந்த நிலையில் நேற்று மலைப்பாதையில் காட்டு யானை ஒன்று சாலையில் முகாமிட்டது இதனால் கர்நாடக செல்லும் வாகனங்களும் அதேபோல் முதுமலை பகுதியில் இருந்து உதகையை நோக்கி வந்த சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் நின்றன.

 

நீண்ட நேரமாக வாகனங்களுக்கு வழி விடாமல் காட்டு யானை சாலையிலேயே நின்றதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த அச்சமடைந்தனர் யானை வனப்பகுதிக்குள் சென்ற பின்னரே சுற்றுலா பயணிகள் நிம்மதியுடன் மலைப்பாதையில் பயணித்தனர்.

மேலும் படிக்க | சூப்பராக பாத்திரம் தேய்க்கும் குரங்கு: கொஞ்சித் தீர்க்கும் நெட்டிசன்கள், வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News