Viral Video: மோடி ஜி இதை கேளுங்க, க்யூட்டான காஷ்மீர் குழந்தையின் கோரிக்கை நிறைவேறியதா
`அஸ்ஸாலாமு அலைக்கும் மோடி ஜி’ என தொடங்கி அந்த குழந்தை வைக்கும் கோரிக்கையை யாரால் நிராகரிக்க முடியும்.
புதுடெல்லி: கொரோனா காரணமாக இந்தியா முழுவதிலும், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் நிலையில், ஒரு க்யூட்டான காஷ்மீர் குழந்தை பிரதமரிடம், தனது மழலை குரலில் பிரச்சனையை சொல்லி, புகார் அளிக்கும் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. 'அஸ்ஸாலாமு அலைக்கும் மோடி ஜி’ என தொடங்கி அந்த குழந்தை வைக்கும் கோரிக்கையை யாரால் நிராகரிக்க முடியும்.
ஆன்லைன் வகுப்புகள் அதிக நேரம் நடப்பதாகவும், அதனால் தனக்கு வேலை மிக அதிகமாக உள்ளது எனவும், பிரதமர் நரேந்திர மோடியிடம் புகார் அளித்த மஹிரா கானின் வீடியோ என்ற அழகிய குட்டி 6 வயது காஷ்மீர் சிறுமியின் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. அக்குழந்தையின் அப்பாவித்தனமான பேச்சும், அழகிய முக பாவனைகளுக்கு நெட்டிசன்களை கவர்ந்துள்ளன.
இதில், உள்ள சிறப்பு என்னவென்ரால், குழந்தையின் வீடியோ வைரலாகிய பிறகு, ஜம்மு-காஷ்மீர் கல்வித் துறை மாணவர்களுக்கு தினசரி ஆன்லைன் வகுப்புகளுக்கான நேரத்தை குறைக்கு முடிவு செய்தது.
அவரது வைரல் வீடியோவை இங்கே பாருங்கள்:
மஹிரா கானின் வீடியோ இணையத்தில் மிகவும் வைரலாகி, ஆன்லைனில் பெருமளவில் பகிரப்பட்டதை அடுத்து, ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, மாணவர்களுக்கான தினசரி ஆன்லைன் வகுப்புகளுக்கான நேரத்தை குறைக்க கல்வித் துறை முடிவு செய்துள்ளதாக அறிவித்தார்.
காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள டங்போராவைச் சேர்ந்தவர் மஹிரா. அவரது தந்தை இர்பான் கான் கஷ்மீர் பள்ளத்தாக்கில் பணிபுரியும் ஒரு அரசு அதிகாரி. குழந்தையின் தாயார் ஒரு இல்லத்தரசி.
ஜீ நியூஸுடன் (Zee News) பேசிய மஹிரா, " வீடியோவை நான் தான் தயாரித்தேன். எனது ஆன்லைன் வகுப்புகள் அதிஅக் நேரம் நடக்கிறது. எனக்கு விளையாடவும் நேரமில்லை. எனக்கு ஆன்லைன் பள்ளி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும், வீட்டுப்பாடம் முடிக்க வேண்டும், பின்னர் சாப்பிட வேண்டும், பால் குடிக்க வேண்டும், தூங்கவும் வேண்டும் எனவே, எனக்கு விளையாட நேரமே கிடைக்கவில்லை. இப்போது வகுப்புகளின் நேரம் குறைக்கப்பட்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. மிக்க நன்றி. "
மஹிராவின் வைரல் வீடியோவுக்குப் பிறகு, “இரண்டு அமர்வுகளில் நடத்தப்படும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை தினசரி ஆன்லைன் வகுப்புகளுக்கான நேரத்தை அதிகபட்சமாக ஒன்றரை மணி நேரம் குறைக்க பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது. ”என்று மனோஜ் சின்ஹா ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.
ALSO READ | வேட்டி கட்டி வேற லெவலில் கலக்கும் CSK சின்ன தல சுரேஷ் ரெய்னா: வீடியோ வைரல்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR