வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மனிதர்கள் மற்றும் விலங்குகளின் வாழ்க்கை முறை முற்றிலும் மாறுபட்டவை. எனினும், சில விஷயங்களில் எந்த வித வித்தியாசமும் இருப்பதில்லை. தாயன்பும், குழந்தைகளை மிக பாதுகாப்பாக பேண வேண்டும் என்ற உணர்வும் தாய்க்கு இருக்கும் பொதுவான உணர்வாகும். இதில் மனிதர்களிலும் விலங்குகளிலும் மாறுபாடு இருப்பதில்லை. 


அதுவும் விலங்குகளில் குரங்குகள் மனிதர்கள் செய்வதை அப்படியே செய்கின்றன. தன் குட்டிகளை தாய் குரங்கு பல இன்னல்களுக்கு இடையில் காக்கும் பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகின்றன. தற்போதும் இது பற்றிய ஒரு வீடியோ வெளிவந்துள்ளது. 


தெரியாத இடங்களிலும், தெரியாத நபர்களிடமும் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை ஒரு தாய் குரங்கு தன் குட்டிக்கு காட்டுவதை இந்த வீடியோவில் காண முடிகின்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


ஒரு நபர் குட்டி குரங்கின் அருகில் சில உணவுப் பொருட்களை வைக்கிறார். அதைப் பார்த்து குட்டி குரங்கு மகிழ்ச்சியில் குதிக்கத் துவங்குகிறது. அதன் அதிக ஆர்வத்தை பார்த்த தாய் குரங்கு குட்டியை பின்னுக்கு இழுக்கிறது. இப்படி அது மீண்டும் மீண்டும் செய்கிறது. 


மேலும் படிக்க | ஆத்தாடி இவ்ளோ பயங்கரமான பாம்பா..எங்க ஏறுது பாருங்க: வீடியோ வைரல் 


அந்நியர்களிடம் இருந்து விலகி இருக்க பாடம் 


வைரலான வீடியோவில், ஒரு குரங்கு ஒரு கையால் மாம்பழங்களை தின்று கொண்டிருப்பதையும், மற்றொரு கையால், தனது குழந்தையை காப்பாற்ற முயற்சிப்பதையும் காண முடிகின்றது. வீடியோவின் துவக்கதில், சில தின்பண்டங்களை காட்டி, ஒரு நபர் குரங்கு குட்டி ஒன்றை தன் அருகில் வரவைக்க முயற்சி செய்வதை காண்கிறோம். அந்த தின்பண்டங்களை பார்த்தவுடன், குட்டி குரங்கும் குதித்துக்கொண்டே அந்த நபரிடம் செல்லத் துடிக்கிறது. ஆனால், தாய் குரங்கும் உடனே அதை பின்னுக்கு இழுத்து தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொள்கிறது. 


ஆனால், அந்த நபரும் மீண்டும் உணவுப்பண்டங்களை காட்டி, குட்டி குரங்கை ஈர்க்க முயற்சிக்கிறார். இதை பார்க்கும் குரங்கும் மீண்டும் மீண்டும் குதித்துக்கொண்டு முன்னே செல்கிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் தாய் குரங்கு அதை இழுத்து தன்னுடன் சேர்த்து கட்டிக்கொள்கிறது. ஆனால், அந்த நபரும் கேட்காமல், மீண்டும் மீண்டும் குட்டியை தன்னிடம் வரவழைக்க முயற்சிக்கும்போது, தாய் குரங்கு அந்த நபர் மீது கோவம் கொள்கிறது. 


பாடாய் படுத்தும் குட்டி குரங்கு, அடித்து இழுக்கும் அம்மா குரங்கு: கியூட் வைரல் வீடியோ



இந்த வீடியொ ட்விட்டரில் @Yoda4ever என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு 7 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களும் ஏராளமான லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பலவித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். தாய் குரங்கின் ஒப்பற்ற பாசத்தையும் குட்டி குரங்கின் சுட்டித்தனத்தையும் அனைவரும் புகழ்ந்து வருகிறார்கள். 


மேலும் படிக்க | 'ஆஹா.. என்ன ஒரு வாழ்க்கை’ கூல் குரங்குகளை பார்த்து ஏங்கும் நெட்டிசன்ஸ், வைரலான வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ