இரண்டு தலை பாம்பு..எலியை கடித்து குதறல்..பதற வைக்கும் வைரல் வீடியோ

Snake Viral Video: தற்போது வெளியாகி உள்ள வீடியோவில், 8 அடி நீள பாம்புக்கு இரண்டு தலை இருப்பதை நாம் காணலாம், இந்த இரு தலை பாம்புகள் இரண்டு எலியை எப்படி பதம் பார்க்கிறது என்பதை நீங்கள் காணலாம். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 24, 2023, 09:40 AM IST
  • இரண்டு எலியை இரண்டு தலை பாம்புகள் வெச்சி செய்கிறது.
  • கொடூரமான இரண்டு தலை பாம்பின் வீடியோ.
  • இன்றைய வைரல் வீடியோ.
இரண்டு தலை பாம்பு..எலியை கடித்து குதறல்..பதற வைக்கும் வைரல் வீடியோ title=

பாம்பின் வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான உலகமாகும். இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத பல விஷயங்களை காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. அதிலும் விலங்குகளின் வீடியோகளுக்கென தனி மவுசு. விலங்குகளின் வைரல் வீடியோவை காண தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பாம்புகளுடன் மக்கள் மிக நெருக்கமாக இருப்பதையும் அவற்றுடன் விளையாடுவதையும் சமீப காலங்களில் அதிகம் கண்டு வருகிறோம். இது பற்றிய பல வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வெளியிடப்படுகின்றன. எனினும், இவை சில சமயம் ஆபத்தாகலாம். அந்தவகையில் தற்போது வெளிவந்துள்ள காணொளி முற்றிலும் மாறுபட்டது.

மேலும் படிக்க | Tiger Video: சுருண்டு கிடக்கும் புலியை சீண்டினால் என்னவாகும்! வைரலாகும் புலிவேட்டை வீடியோ

எலிகளை வெச்சி செஞ்ச இரண்டு தலை பாம்பு
தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் இரண்டு தலை கொண்ட பாம்பு இருப்பதை நாம் காணலாம். பார்க்கவே படுபயங்கரமாக இருக்கும் இந்த வீடியோவில் இரண்டு தலை கொண்டு பாம்பு ஒன்று எலிகளை சாப்பிடுவதை நாம் காணலாம்.  இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை எடுத்து வெளியிட்ட பிரையன் இது போல பல விசித்திரமான வீடியோக்களை இதற்கு முன்னர் வெளியிட்டுள்ளார். முக்கியமாக விலங்குள் குறித்த வீடியோக்களை தான் அதிகம் எடுத்து வருகிறார்.

இரண்டு தலை பாம்பின் திக் திக் வைரல் வீடியோ

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

இந்த வீடியோ snake._.world என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.

 மேலும் படிக்க | ‘டேய்..... இத பாருடா’: ஃபோனுக்கு ஃபேனான குரங்கு, வியக்கும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News