'ஆஹா.. என்ன ஒரு வாழ்க்கை’ கூல் குரங்குகளை பார்த்து ஏங்கும் நெட்டிசன்ஸ், வைரலான வீடியோ

Monkey Viral Video: இணையத்தில் வைரலாகும் குரங்குகளின் ஒரு வீடியோ அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றது. இதை பார்த்தால் ஒரு பக்கம் ஏக்கமாகவும், மறுபுறம் மகிழ்ச்சியாகவும் உள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jan 24, 2023, 04:40 PM IST
  • சிங்கம், புலி, குரங்கு, பாம்பு ஆகிய மிருகங்களுக்கு இணையத்தில் தனி மவுசு உள்ளது.
  • இவற்றின் வீடியோக்கள் அதிகம் வைரல் ஆகின்றன.
  • அதுவும் குரங்குகளின் வீடியோக்களுக்கென இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
'ஆஹா.. என்ன ஒரு வாழ்க்கை’ கூல் குரங்குகளை பார்த்து ஏங்கும் நெட்டிசன்ஸ், வைரலான வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

சிங்கம், புலி, குரங்கு, பாம்பு ஆகிய மிருகங்களுக்கு இணையத்தில் தனி மவுசு உள்ளது. இவற்றின் வீடியோக்கள் அதிகம் வைரல் ஆகின்றன. அதுவும் குரங்குகளின் வீடியோக்களுக்கென இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குரங்குகளின் குறும்புகள் அனைவர் மனதையும் கொள்ளையடிக்கின்றன. குரங்குகளின் பல வித வீடியோக்கள் சமூக வலத்தளங்களில் பகிரப்படுகின்றன. 

மனிதர்களை போல் அப்படியே செய்வதில் குரங்குகளுக்கு நிகர் வேறு எந்த மிருகமும் இல்லை. துணி துவைப்பது, பாத்திரம் தேய்ப்பது, குழந்தைகளை தூக்கிக்கொள்வது, என பல விதத்தில் குரங்குகள் மனிதர்களை போல் அப்படியே செய்கின்றன. தற்போதும் ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இதில் மனிதர்களும் பார்த்து பொறாமை படும் செயலை குரங்குகள் செய்கின்றன. 

இந்த வீடியோவில், மூன்று குரங்குகள் குளத்தில் மிக அமைதியாக ஓய்வெடுப்பது போன்ற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்தால், நம்மால் இப்படி நிம்மதியாக ஓய்வெடுக்க முடியவில்லையே என கண்டிப்பாக நமக்குத் தோன்றும். ஆனால், அமைதியாக ஓய்வெடுக்கும் அந்த குரங்குகளை பார்த்தால் மனதில் ஒரு வித மகிழ்ச்சியும் ஏற்படுகின்றது.

மேலும் படிக்க | கழுகுக்கு தண்ணி காட்டிய மான்! இணையத்தை வியப்பில் ஆழ்த்திய வீடியோ!

மனிதர்களாகிய நாம் நமது பிசியான வாழ்வில் சிக்கித்தவிக்கிறோம். ஓய்வெடுப்பது நமக்கு மிகவும் தேவையான ஒரு விஷயமாக இருந்தாலும், அது அவ்வளவு எளிதாக அனைவருக்கும் கிடைத்துவிடுவதில்லை.  ஆகையால், எந்த வித சலனமும் இல்லாமல் நீரில் ஜாலியாக பொழுதை கழிக்கும் இந்த குரங்குகளை பார்த்தால் நமக்கு ஏக்கமாகவும், அதே சமயம் மகிழ்ச்சியாக்வும் உள்ளது. 

நெட்டிசன்களை ஏங்க வைத்த வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @adorable.monkey

இந்த வீடியோ சமூக ஊடகத்தளமான இன்ஸ்டாகிராமில் adorable.monkey என்ற கணக்கில் இந்த மாத தொடக்கத்தில் பகிரப்பட்டது.  இந்த வீடியோவுக்கு இதுவரை ஆறு மில்லியன் வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | அடம் பிடித்த விஷப்பாம்பை அடக்கி ஆளும் இளைஞன்: திகிலூட்டும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News