குட்டிக்கரணம் போடும் ‘குண்டு’ பாண்டா - இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ
குட்டிப் பாண்டா ஒன்று அழகாக குட்டிக்கரணம் போடும் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.
விலங்குளின் சேட்டையை காணக் கண்கோடி வேண்டும் என்று சொன்னால் மிகையில்லை. வாய் வார்த்தைகளில் பேசும் நக்கல், குசும்புகளைவிட செயலில் செய்யும் சேட்டைகள் மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும். கேமரா வருகைக்குப் பின்னர் விலங்குகளின் அத்தகைய சேட்டைகளை காணும் வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கிறது. மனிதர்கள் இல்லாத இடத்தில் வாழும் விலங்குகள், தனிமையில் இருக்கும் போது செய்யும் சேட்டைகள், காண்போரை வயிறு வலிக்க சிரிக்கச் செய்யும்.
மேலும் படிக்க | சண்டையில் சிக்கிய மான்களின் கொம்புகள்; தாக்க வரும் சிறுத்தை; நடந்தது என்ன..!!
அப்படியான பாண்டாவின் சேட்டை வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. குண்டாக இருக்கும் குட்டி பாண்டா, பூங்கா அல்லது வனப்பகுதியில் தனியாக உலாவுகிறது. செடி கொடிகள் நிறைந்து கட்டடம் இருக்கும் அப்பகுதியில் அந்த குட்டி பாண்டா எங்கேயோ செல்ல முற்படுகிறது. சுவற்றின் மீது ஏற முயற்சிக்கிறது. அந்த முயற்சி பலனளிக்காததால், இறங்கி நடக்கலாம் என திரும்புகிறது. திடீரென என்ன நினைத்ததோ தெரியவில்லை. ஜாலியாக குட்டிக் கரணம்போடுகிறது.
ஐந்து முதல் ஆறு குட்டிக் கரணங்களைப் போடும் பாண்டாவை பார்ப்பவர்கள், நிச்சயம் வாய்விட்டு சிரிக்காமல் இருக்க மாட்டார்கள். பார்ப்பதற்கு கியூட்டாக இருக்கும் அந்த வீடியோ இணையத்திலும் வைரலாகியுள்ளது. ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ள பாண்டாவின் வீடியோவுக்கு கமெண்ட் அடித்துள்ள நெட்டிசன்கள், குட்டிப் பாண்டா கியூட்டாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். சர்கஸில் குட்டிக்கரணம் போடுவதுபோல், பாண்டா ஜாலியாக உலாவுவது ரசிக்கும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க | லேட்டா வந்த மாப்பிள்ளை, டென்ஷன் ஆன மணப்பெண்: போர்க்களமான மணமேடை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR