இணைய உலகில் காட்டு விலங்குகள் தொடர்பான வீடியோவிற்கு என்றுமே வரவேற்பு அதிகம், அதிலும் சண்டை அல்லது தாக்குதல் வீடியோ என்றால் கேட்கவே வேண்டாம்....
இந்நிலையில், காட்டின் நடைபெற்ற ஒரு சண்டை வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ஊரு இரண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற பழமொழியை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். எனவே, நம்மக்குள் சண்டையிட்டால், அது மூன்றாம் தரப்பிற்கு சாதகமாக அமிந்து விடும் என்றும், அந்த வாய்ப்பை யாரும் பயன்படுத்திக் கொள்ளாத வகையில், சண்டைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதே அதன் பொருள்.
வனவிலங்குகள் சண்டையிடும் இந்த வைரல் வீடியோவில் இரண்டு மான்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவதையும், இரண்டு மான்களின் சண்டையை, ஒரு சிறுத்தை தனக்கு சாதகமாக முயற்சிப்பதையும் காணலாம். சிறுத்தையின் கண்கள் மானை எப்படி தாக்கலாம் என்பதில் தான் உள்ளது
இரண்டு மான்களின் சண்டை
சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், காட்டில் இரண்டு மான்கள் எப்படி ஒன்றுக்கொன்று பயங்கரமாக சண்டையிட்டுக் கொள்வதைக் காணலாம். இருவரின் சண்டையை ஒரு சிறுத்தை தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கிறது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள அவர் உடனடியாக அங்கு பாய்ந்து வருகிறது.
மான்களுக்கு இடையே நடக்கும் சண்டையில், சிறுத்தை, மான்களை சுற்றி சுற்றி வருகிறது. மானை இரையாக ஆக்கிக்கொள்ளும் வாய்ப்பைத் தேடிக்கொண்டிருக்கிறது.
மேலும் படிக்க | Viral Video: 'காதலை' வெல்ல இரு ராஜநாகங்களுக்கு இடையில் நடக்கும் கடுமையான போர்!
வீடியோவை இங்கே காணலாம்:
இந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி திபன்சு கப்ரா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதற்கு அவர் கொடுத்த தலைப்பில் : " சண்டையில் சிக்கிக் கொண்ட மான்களின் கொம்புகள், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள பார்க்கும் சிறுத்தைப்புலி’ என எழுதியுள்ளார். உலகமும் அப்படித்தான் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | Viral Video: 10வது மாடியிலிருந்து தொங்கும் குழந்தை; மனதை பதற வைக்கும் வீடியோ!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR