வாழ்க்கையில் பயணங்கள் என்றும் முடிவதில்லை. பயணங்கள் முடியும்போது வாழ்க்கையும் முடிந்துவிடும். ஆனால், பயணம் என்பது வாழ்க்கைப் பயணம் மட்டுமல்ல, எல்லாவித பயணங்களும் அடங்கும்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எந்த வகை உயிரினமாக இருந்தாலும் சரி, பயணங்கள் இயல்பானவை. மனிதர்கள் வகுத்த பயண விதிகளுக்கும் விலங்குகளுக்கான பயண விதிகளும் மாறுபட்டவை.


காட்டில் வாழும் விலங்குகள் இரை தேடும் பயணத்தில் தொடர்ந்து ஈடுபடுகின்றன. அவற்றின் விதிமுறைகளும் பயணத் தடங்களும் இரையை மையப்படுத்தியதாகவே இருக்கும். தங்கள் உள்ளுணர்வு மற்றும் தெரிவின் அடிப்படையில் விலங்குகள் மற்றும் பறவைகளின் பயணங்கள் நடக்கும்.


மேலும் படிக்க | என்னை செல்லம் கொஞ்ச மாட்டியா: வைரலாகும் யானையின் கட்டிப்பிடி வைத்தியம்


குட்டிகள் மீது தாய் வைத்திருக்கும் பாசம் இயற்கையானது. ஆனால் குழந்தைகளுக்கு, தாயைத் தவிர குஞ்சுகளுக்கு பாதுகாப்பைத் தர யாராலும் முடியாது.


விலங்குகள் மற்றும் பறவைகளின் பயணங்கள் அவற்றின் இரைத் தேடலுக்கானவை மட்டும் என்று இருந்த காலங்கள் மலையேறிவிட்டன.


காலப்போக்கில் மனிதர்கள் காட்டை அழித்து தனது சுயநலத்திற்காக மாற்றங்களை செய்ததால், சுற்றுச்சூழல் பாதிப்பு மட்டுமல்ல பல விலங்குகளின் வாழ்க்கைப் போக்கும் மாறிவிட்டன.


மேலும் படிக்க | கர்ஜனையால் காட்டை உலுக்கும் சிங்கம்: குரலால் அதிகாரம் செய்யும் காட்டு ராஜா


இதை உணர்த்தும் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. வாத்து தனது குஞ்சுகளுடன் வரிசைக் கிரமமாக நடந்து செல்வது ஒரு பரபரபபான வீதியில் என்பதும், அவற்றுக்கு செல்வதற்கு வசதி ஏற்படுத்திக் கொடுக்கும் காவலரின் அன்பும் அனைவருக்கும் வியப்பளிக்கிறது.



பலரின் இதயங்களையும் கவர்ந்துள்ள இந்த வைரல் வீடியோவில் தாய் வாத்து, தனது 5 குழந்தைகளோடு சாலையை கடக்கிறது. அவற்றுக்கு பாதுகாப்பாக, போக்குவரத்துக் காவலர், நடந்து சென்று சாலையை கடக்க உதவி செய்கிறார்.


இந்த வீடியோ வெளியானதுமே பலரால் பார்க்கப்பட்டு, பகிரப்பட்டு வைரலாகிறது. அதோடு, சுற்றுச்சூழல் மாறுதல்களையும், மனிதன் காட்டை கபளீகரம் செய்வதன் எதிர்வினைகளையும் உணர்த்துவதாக இருக்கிறது.


இந்த வீடியோ பாரிஸ் நகர வீதிகளில் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டது என்று வீடியோவுக்கு தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 



இந்த வீடியோ மனதை மகிழ்விக்கிறது. அதிலும் தாயும் குஞ்சுகளும் அழகாக நடந்து செல்வது ஆச்சரியத்தை அளிக்கிறது. வீடியோவில் காணப்படும் போக்குவரத்து போலீஸ் வாத்துக் குடும்பத்திற்கு உதவி செய்வது அனைவரையும் நெகிழ்விக்கிறது.  


டிவிட்டரில் @buitengebieden என்ற பக்கத்தில் பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோ பலரையும் கவர்ந்துள்ளது. பலரையும் கவர்ந்த இந்த வீடியோ பார்க்கப் பரவசமூட்டுகிறது. 


மேலும் படிக்க | நீ சிங்கம்டா: மியாவ் சொல்லக்கூடாது: எப்படி கர்ஜிப்பது சொல்லிக்கொடுக்கும் தாய்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR