ஓலா எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் குறுகிய காலத்தில் சந்தையில் முத்திரை பதித்துள்ளது, ஆனால் தற்போது இந்த தயாரிப்பில் பல புகார்கள் வெளியாகி வருகிறது. வாடிக்கையாளர்களின் புகார்கள் மற்றும் ஸ்கூட்டரில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவங்களுக்குப் பிறகு, தற்போது ஸ்கூட்டரின் வேகத்தில் ஒரு பெரிய கோளாறு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓலா நிறுவனம் சார்பில் அண்மையில் இரண்டு எலக்ட்ரிக் மாடல் ஸ்கூட்டர்கள் (ஓலா எஸ்1) அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்கூட்டர்கள் சந்தைக்கு வருவதற்கு முன்பே வாடிக்கையாளர்களால் ஈர்க்கப்பட்டு நாடு முழுவதும் அதிக எண்ணிக்கையில் அதற்கான புக்கிங்குகள் செய்யப்பட்டன.


மேலும் படிக்க | ஓபன் ரோர் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் மோட்டர் சைக்கிள்


இதைத்தொடர்ந்து, நீண்ட நாள் காத்திருப்புக்கு பின்னர் புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு ஸ்கூட்டர்களை ஓலா நிறுவனம் டெலிவரி செய்து வருகிறது.


இந்நிலையில் வினோதமான முறையில் ஸ்கூட்டர் நகரும் வீடியோ சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எனினும் அந்த வீடியோவின் சரியான ஆதாரம் தெரியவில்லை. வீடியோவில், ஓலா எஸ்1 ப்ரோ தரையில் கிடப்பதைக் காணலாம், அதன் சக்கரம் தொடர்ந்து தலைகீழ் பயன்முறையில் சுழல்வதை நாம் காணலாம்.



அடுத்தடுத்து, எலக்ட்ரிக் பைக்குகள் இதுபோல் விபத்துக்கு உள்ளாவதால், எலக்ட்ரிக் பைக் வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.


ஓலாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பொறுத்தவரையில், இது எஸ்1 & எஸ்1 ப்ரோ என்கிற இரு விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் எஸ்1 மாடல் ரூ.1 லட்சம் என்கிற அளவிலான எக்ஸ்-ஷோரூம் விலையிலும், எஸ்1 ப்ரோ மாடல் ரூ.1.30 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையிலும் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் எஸ்1 வேரியண்ட்டில் 2.98kWh திறன் கொண்ட பேட்டரி தொகுப்பும், எஸ்1 ப்ரோ மாடலில் 3.97kWh பேட்டரி தொகுப்பும் வழங்கப்படுகிறது.


மேலும் படிக்க | Best E Bikes: இவைதான் நாட்டின் மிகச்சிறந்த மின்சார பைக்குகள்: விலை, பிற விவரங்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR