வைரல் வீடியோ: இன்றைய டிரெண்டிங்கான உலகில், பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். அத்தகைய சூழ்நிலையில் சமூக ஊடகத்தில் பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகி வருகின்றன. இதில் சில பயனுள்ள தகவல்களை நாம் பெறுகிறோம், அதேசமயம் பல கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. மேலும் நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த வகையில் விலங்குகளின் வீடியோக்களை மக்கள் அதிகம் விரும்பி பார்க்கிறார்கள். அதிலும் பாம்புகளின் வீடியோக்களுக்கு சமூக ஊடகங்களில் தனி மவுசு இருக்கிறது. பாம்பின் பல அதிர்ச்சியூட்டும் வீடியோக்களையும் நாம் அவ்வப்போது கண்டு வருகிறோம். இதில் சிலவை நம்மை ரசிக்க வைக்கிறது, சிலவை கிடுகிடுக்க வைக்கும், மேலும் சில வீடியோக்கள் நம்மை அதிர்ச்சியடையச் செய்கிறது. தற்போதும் அப்படி ஒரு வீடியோ தான் இங்கு வைரலாகி வருகின்றது. இது ஒரு ஆபத்தான பாம்பு மற்றும் ஒரு நபரை பற்றியது. 


நபரின் முகத்தில் ஊரந்த கொடிய பாம்பு


வெளியாகி உள்ள வீடியோவில், உயரமான மலையிலிருந்து பச்சை நிற பாம்பு ஒன்று அங்கு சென்று இருந்த நபரின் தலையில் விழுந்தது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அந்த நபர் துளி கூட பயப்படவே இல்லை என்பது தான். அந்த பாம்பு மெதுவாக அந்த நபரின் முகத்தை நோக்கி நகர ஆரம்பித்தது. இருப்பினும் அந்த நபர் பயப்படவில்லை, மாறாக அவர் சிரித்துக் கொண்டே இருக்கிறார்.


உண்மையில், பாம்பு வாய்க்கு அருகில் வந்தவுடன், அந்த நபர் மெதுவாக மரங்களும் செடிகளும் நிறைந்த மலையின் அருகே சென்று முகத்தை ஒட்டியப் படி வைத்தார். இதனால் அந்த நபரின் வாயிலிருந்து பாம்பு சத்தமில்லாமல் இறங்கி செடியின் மீது ஏறியது.


பாம்பு வீடியோவை இங்கே பாருங்கள்



இந்த வீடியோவுக்கு பல வித ரியாக்ஷன்களும் கமெண்டுகளும் வந்த வண்ணம் உள்ளன. இந்த வீடியோ தற்போது snake._.world என்கிற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தகக்கது. 


மேலும் படிக்க | Viral Video: தாய்பாலுக்கு மிஞ்சியது எதுவும் இல்லை...குட்டி யானை தாய்பால் குடிக்கும் அரிய காட்சி! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ