மிகப்பெரிய கொம்புகளை கொண்டிருக்கும் மான் ஒன்று, வனப்பகுதியில் இருக்கும் கேட் ஒன்றை புத்திசாலித்தனமாக கடந்து செல்கிறது. இணையத்தில் பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோ இணையவாசிகளை வெகுவாக கவர்ந்திருக்கிறது. சில நொடிகள் ஓடும் இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ‘ஏய் வா விளையாடலாம்’: வம்பிழுக்கும் குரங்கு, அரவணைக்கும் புலி, செம கியூட் வைரல் வீடியோ


அந்த வீடியோவில் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டிருக்கும் கேட் ஒன்று இருக்கிறது. அந்த கேட்டின் குறுக்கே கம்பிகள் இருப்பதால் நிச்சயமாக கடந்து செல்ல முடியாது. ஆனால், அந்த பக்கம் செல்ல வேண்டும் என விரும்பும் மான், சிறிதுநேரம் யோசித்து கேட்டின் அடிப்புறத்தில் இருக்கும் இடைவெளி வழியே செல்ல விரும்புகிறது. கொம்பு மிகப்பெரியதாக இருப்பதால், அந்த கேப்பில் கொம்பு புகுமா? என்ற சந்தேகம் எழும்.



மானுக்கும் அந்த சந்தேகம் இருந்தாலும், முயற்சி செய்து பார்க்கிறது. அந்த முயற்சி தான் மான் கேட்டை கடந்து செல்வதற்கான வழியாக அமைந்தது. கேட்டின் அடிப்புறத்தில் இருக்கும் இடைவெளியில் கொம்பை நுழைத்து முயற்சி செய்கிறது. சில நொடி முயற்சிகளுக்கு பின்னால் கொம்பு நுழைந்துவிட்டதை தொடர்ந்து மான் ஈஸியாக கேட்டை கடந்து விடுகிறது. முயற்சி உடையார், இகழ்ச்சி அடையார் என்ற பழமொழிக்கு ஏற்ப, மானின் இந்த முயற்சி சிறியதாக இருந்தாலும், வெற்றி கிடைத்துவிடுகிறது. இப்போது டிவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் மானின் வீடியோவை பலரும் ரசித்து வருகின்றனர்.


மேலும் படிக்க | கல்யாணத்துக்கு பஸ் புக் பண்ணு பாத்திருப்பீங்க ஆனா....Flight-ட்டு...வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ