தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதில், இன்று இணைந்துள்ளார் பிரபல இயக்குநர் பாலா. அதிலும் அவர் சமூக ஊடகமான டிவிட்டரின் இன்று இணைந்து, தனது முதல் பதிவிலேயே முதல்வரை வாழ்த்தியிருப்பது பேசுபொருளாகி இருக்கிறது.




பிரபல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் பாலா சமூக ஊடகங்களிலிருந்து எப்போதுமே விலகி இருப்பவர். பொது தளங்களிலும் அவர் மிகவும் அரிதாகவே காணப்படுபவர். கூச்ச சுபாவம் உள்ளவர் என்று பலரும் கருதுவார்கள். 


ஆனால் அவர் தனது இயல்பை விட்டு வெளியேவந்து டிவிட்டரில் இணைந்தி்ருக்கிறார். அதிலும் முதல் செய்தியாக முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்திருகிறார். அதிலும் திருக்குறளை மேற்கோள் காட்டி வாழ்த்து தெரிவித்திருக்கிறார் என்பது அனைவருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.  


Also Read | தமிழகத்தில் இன்று (மே,09) 28,897 பேருக்கு கொரோனா பாதிப்பு, பலி 236   


@IyakkunarBala என்ற ட்விட்டர் கணக்கில் அறிமுகமான இயக்குநர் பாலாவின் முதல் டிவிட்டே அனைவரையும் கவர்ந்திருக்கிறது.  


தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துச் செய்தியை தெரிவித்துக் கொண்ட பாலா, இதுபோன்ற சம்பிரதாயங்களைத் தவிர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் கோரியிருந்த போதிலும் தன்னால் வாழ்த்து சொல்லாமல் இருக்க முடியவில்லை என்று பதிவிட்டுள்ளார் பாலா.


Also Read | Puducherry முதலமைச்சர் ரங்கசாமி க்கு கொரோனா பாதிப்பு உறுதி 
 
ஸ்டாலினின் திறமை, திறமை மற்றும் தாழ்மையான நடத்தை ஆகியவற்றைப் பாராட்டியுள்ள பாலா, ”மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு,


தேவையற்ற வாழ்த்துரைகளை தெரிவிப்பதை தவிருங்கள் என்று கேட்டுக்கொண்டீர்கள். ஆனாலும் இதைத்தவிர்க்க முடியவில்லை, தங்கள் ஆற்றல், செயல் மற்றும் பண்பான நடவடிக்கைகள் அனைத்தும் மனித நாகரிகத்தின் உச்சம் நன்றிகள்” என்று சுருக்கமாக வாழ்த்தை தெரிவித்துள்ளார்.


வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோனோக்கி வாழுங் குடி
– என்ற திருக்குறளை குறிப்பிட்டு, வாழ்த்திலும் தனது தனி முத்திரையை பதித்துள்ளார் இயக்குநர் பாலா.


இனிமேல் இயக்குநர் பாலா தனது கருத்துக்களையும், திரைப்பட திட்டங்களையும் சமூக ஊடகங்களில் விரைவில் பகிர்ந்து கொள்வார் என்று ரசிகர்கள் குதூகலிக்கின்றனர்.  


Also Read | ஜோஹன்னஸ்பர்க் - தோஹா வழியாக இந்தியாவுக்கு ஹெராயின் கடத்தல்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR