வாஷிங்டன்: புகைப்பட பகிர்வு தளம் இன்ஸ்டாகிராம் live streamsகளுக்கான நேர வரம்பை 60 நிமிடங்களிலிருந்து நான்கு மணி நேரமாக நீட்டித்துள்ளது. இந்த மாற்றம் உலகளாவியது மற்றும் அனைத்து இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கும் பொருந்தும் என்பது அனைவருக்கும் மகிழ்ச்சியளிக்கும் செய்தி.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

படைப்பாளர்கள், யோகா பயிற்றுநர்கள், இசைக்கலைஞர்கள், கலைஞர்கள், சமையல்காரர்கள் மற்றும் போன்றவர்கள் இடைவெளி இல்லாமல், இடையூறு ஏற்படாமல் நீண்ட அமர்வுகளைச் செய்ய உதவும் வகையில் என்று சமூக ஊடகங்கள் பற்றிய செய்திகளைக் கொடுக்கும் Mashable தெரிவித்துள்ளது.


இந்த வசதி IP அல்லது கொள்கை மீறல்கள் தொடர்பான பதிவு ஏதும்  இல்லாத "நல்ல நிலையில்" உள்ள கணக்குகளுக்கு மட்டுமே கிடைக்கும் என்று இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.


30 நாட்கள் வரை நேரடி ஒளிபரப்புகளை காப்பகப்படுத்துவதற்கான விருப்பத்தையும் இன்ஸ்டாகிராம் தற்போது கொடுக்கிறது. அதுமட்டுமல்ல, live streams நேர வரம்பை 60 நிமிடங்களில் இருந்து 4 மணி நேரம் வரை நீட்டிக்கிறது


"இப்போது உங்களுடைய நேரடி வீடியோக்கள் உங்கள் காப்பகத்தில் வைக்கப்படும். அவற்றை மட்டுமே நீங்கள் காண முடியும். உங்கள் வீடியோக்கள் 30 நாட்களுக்கு உங்களுடைய காப்பகத்தில் கிடைக்கும். அந்த நேரடி வீடியோக்களை உங்கள் சாதனத்தில் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது அவற்றை IGTV-இல் பதிவேற்றலாம் என்று Mashable தெரிவித்துள்ளது.  


இந்த புதிய அம்சம் `விரைவில்' தொடங்கப்படும் என்று இன்ஸ்டாகிராம் கூறுகிறது. IGTV மற்றும் லைவ் ஸ்ட்ரீமின் முடிவில் `Live Now` பகுதியை புதுப்பிக்கப்போவதாகவும், பிடித்தமான கலைஞர்கள் மற்றும் படைப்பாளர்களிடமிருந்தும், அவர்கள் பின்பற்றும் நபர்களிடமிருந்தும், ஆர்வமுள்ளவர்களுக்கு கூடுதல் உள்ளடக்கத்தை மக்களுக்கு வழங்குவதற்கான யோசனையுடன் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது..


Read Also | உங்கள் அனுமதி இல்லாமல் யாரும் WhatsApp groupஇல் சேர்க்காமல் இருக்க trick இதோ…


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR