யாரும் உங்கள் அனுமதியில்லாமல் வாட்ஸ்அப் குரூப்பில் சேர்க்காமல் இருக்க வேண்டுமா? இந்த தந்திரத்தை பின்பற்றினால்தினசரி எதிர்கொள்ளும் WhatsApp forward தொல்லை மந்திரம் போட்டது போல் நின்றுவிடும்.
உண்மையில் யாரும் உங்களை WhatsApp வாட்ஸ்அப் குரூப்பில் சேர்க்காமல் இருக்கும் வழிமுறைகளையும் வகுத்து வைத்திருக்கிறது. அதற்கான வழிமுறை உங்களுக்குத் தெரிந்திருந்தால் வாட்ஸ்அப் குழுக்களில் மாட்டிக் கொண்டு போன் ஹேங்க் ஆகாமல் தப்பித்திருப்பீர்கள்.வாட்ஸ் அப் குரூப்பில் மாட்டிக் கொண்டு அவதிப்படும் தலைவலியில் இருந்து நிவாரணம் இதோ…
உங்களுக்கு எந்த வாட்ஸ்அப் குழுவிலும் சேர விருப்பம் இல்லை என்றால், Everyone என்ற முதல் விருப்பத்தைத் தேர்வுசெய்யவும். நீங்கள் மூன்றாம் நபர்கள் அல்லது வணிகக் குழுக்களில் இருந்து விலகி இருக்க விரும்பினால், My Contacts என்ற விருப்பத்தைத் தேர்வு செய்யலாம்.
வாட்ஸ்அப் உங்கள் வாழ்க்கையை எளிதாக்குகிறது. ஆனால் சில நேரங்களில் இது ஒரு தலைவலியாகவும் மாறிவிடுகிறது. உங்களுடைய அனுமதியின்றி பல குழுக்களில் உங்களை கோர்த்து விட்டிருக்கும் பல அனுபவங்கள் பலருக்கும் இருக்கலாம். இதுபோன்ற குழுக்களுடன் தொடர்பு கொள்ள யாரும் உங்களை கட்டாயப்படுத்தப்படுவதும் பிடிக்கவில்லையா? ஆனால் என்ன செய்வது என்று தெரியவில்லையா? கவலையை விடுங்கள். இனிமேல், உங்கள் அனுமதியில்லாமல் வாட்ஸ்அப்பில் யாரும் உங்களை, நீங்கள் விரும்பாத குழுவில் சேர்க்க முடியாது. அத்தகைய அமைப்பை உருவாக்க முடியும்.
கீழ்கண்டவற்றை செய்தால் போதும்…
- முதலில் திறந்த வாட்ஸ்அப் செயலியை திறக்கவும்.
- இப்போது மேல் வலதுபுறத்தில் உள்ள மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்யவும்.
- நீங்கள் setting விருப்பம் இருப்பதைப் பார்க்கலாம். அதை சொடுக்கவும்.
- setting பிரிவில், மேலே உள்ள கணக்கு பிரிவில் சொடுக்கவும்.
- இப்போது Privacy என்ற தனியுரிமை விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்
- Privacy பிரிவில் நீங்கள் குழுக்களின் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்
- இப்போது group பிரிவில் மூன்று விருப்பங்கள் இருக்கும்.
- அதில் உங்கள் விருப்பத்தை நீங்கள் தேர்வு செய்யலாம்.
உண்மையில் யாரும் உங்களை WhatsApp வாட்ஸ்அப் குரூப்பில் சேர்க்காமல் இருக்கும் வழிமுறைகளையும் வாட்ஸ்அப் ஏப் வகுத்து வைத்திருக்கிறது. Everyone, My Contacts, My contacts except என சில விஷயங்கள் இருப்பது உங்களுக்குத் தெரிந்திருந்தால் வாட்ஸ்அப் குழுக்களில் மாட்டிக் கொண்டு போன் ஹேங்க் ஆகாமல் தப்பித்திருப்பீர்கள்.
ஒரு குழுவில் யாராவது தற்செயலாக உங்களை சேர்த்துவிட்டாலும், அதிலிருந்து விலகி இருக்கும் மற்றொரு வழியும் இருக்கிறது. நீங்கள் அந்த குழுவைத் திறந்து, mute என்ற தெரிவை கிளிக் செய்தால் போதும், அந்த குழுவில் இருந்து உங்களுக்கு நிவாரணம் கிடைத்துவிடும்.
Also Read | ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து Google Pay திடீரென்று காணாமல் போன காரணம் என்ன தெரியுமா?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR