புதுடெல்லி: கையில் இருந்து மூன்றடி கீழே விழுந்தாலும் வீணாய்ப் போய்விட்டது போன் என்று பயப்படுவோம். ஆனால் விமானத்தில் இருந்து கீழே விழுந்தும், ஒன்றும் ஆகாமல் அப்படியே இருந்த iPhone ஆச்சரியத்தை அளிக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரேசிலைச் சேர்ந்த ஆவணப்படத் தயாரிப்பாளர் எர்னஸ்டோ கலியோட்டோ (Ernesto Galiotto) என்ற கலைஞரின் அனுபவம் இது. அவர் தனது ஐபோன் 6 எஸ் (iPhone 6S) மூலம்  விமானத்தில் இருந்து சில படங்களை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது கையில் இருந்து  தற்செயலாக போன் கீழே விழுந்துவிட்டது.  


ரியோ டி ஜெனிரோ-வின் (Cabo Frio) கபோ ஃப்ரியோ-வில் (Rio de Janeiro) கடற்கரைக்கு மேல் 2,000 அடி உயரத்தில் விமானத்தில் கலியோட்டோ (Galiotto) பயணித்துக் கொண்டிருந்தார். புகைப்படங்களை (Photos) எடுத்துக் கொண்டிருந்த அவரின் கைகளில் இருந்து ஏதேச்சையாக ஐபோன் நழுவிவிட்டது. அவர் கவனமாக இருந்தாலும் பலத்த காற்று வீசியதால் போன் கீழே விழுந்துவிட்டதாம். உடனே விமானத்தை கீழே கொண்டு சென்று போன் விழுந்த இடத்தில் தேடினார்.


’தேடுங்கள் கிடைக்கும், தட்டுங்கள் திறக்கப்படும்’ என்ற ஆக்கப்பூர்வமான வார்த்தைகள் அவருக்கு நினைவில் வந்ததோ என்னவோ, யாரும் எதிர்பார்க்காத அதிசயமாக ஐபோன், ’I am here’ என்று அப்படியே இருந்தது.


Also Read | மேலும் 2 புதிய அம்சங்களை அறிமுகம் செய்யும் Whatsapp


இது எதிர்பாராத இன்ப அதிர்ச்சித் தரும் விஷயமாக இருந்தாலும், இதற்கான பாராட்டுகள் ஐபோனை தயாரித்த நிறுவனத்திற்கே என்று பலரும் பாராட்டுகின்றனர்.  
தனது இந்த வித்தியாசமான அனுபவத்தை யூடிபில் (Youtube) வீடியோவாக பதிவிட்டுள்ளார் எர்னஸ்டோ கலியோட்டோ (Ernesto Galiotto).


இதுபோன்ற அதிசய சம்பவம் உலகில் முதன்முறையாக நிகழ்ந்துள்ளதா என வரலாற்றின் ஏடுகளில் திரும்பிப் பார்த்தால், இல்லை இதற்கு முன்பே இப்படிப்பட்ட ஆச்சரியங்கள் நடைபெற்றுள்ளது தெரிகிறது.  


2018 ஆம் ஆண்டில், அயோவா-வை (Iowa) சேர்ந்த சர்வீந்தர் நபர்ஹாஸ் (Sarvinder Naberhaus) என்ற பெண், விண்டேஜ் அமெரிக்க விமானத்தில் (vintage American aeroplane) பயணித்துக் கொண்டிருந்தார். தனது இருக்கையிலிருந்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டிருந்தபோது, வீசிய கடுமையான காற்று அவரது கையிலிருந்த  போனை கீழே விழச் செய்துவிட்டது. 


கீழே விழுந்த போனைத் தேடுவதில் பயன் ஏதும் இல்லை என்று விமானி அந்த பெண்ணிடம் தெரிவித்தார். ஆனால் முயற்சி திருவினையாக்கும் என்று நினைத்த நேபர்ஹாஸ், ஃபைண்ட் மை ஐபோன் (Find My iPhone app) என்ற செயலியைப் பயன்படுத்தி தனது கைப்பேசியை தேடத் தொடங்கினார்.


இறுதியில், அவர்து முயற்சி உண்மையிலுமே பலனளித்தது. குடியிருப்பு பகுதி ஒன்றில் புல்வெளியில் அவரது போன் இருப்பதை நேபர்ஹாஸ் கண்டுபிடித்தார். இவருக்கும் அதிர்ஷ்டம் இருந்தது. இவரது கைப்பேசியும், எந்தவித கீறலும் இல்லாமல், நல்ல நிலையில் கிடைத்துவிட்டது.  


Also Read | சம்பள பாக்கி பிரச்சனை: iPhone தொழிற்சாலையை அடித்து நொறுக்கிய ஊழியர்கள்


இதேபோல, புளோரிடாவின் ஆர்லாண்டோ-வில்  (Orlando) ஒரு பெண் ஒரு பொழுதுபோக்கு பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்ததபோது, அவரது கையில் இருந்த ஐபோன் தற்செயலாக கீழே விழுந்துவிட்டது. 450 அடி உயரத்திற்கு மேல் இருந்து செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்த போது கைப்பேசி கையில் இருந்து நழுவியது. அவருடைய ஐபோனும் நல்ல நிலையில் கண்டெடுக்கப்பட்டது.


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR