சிறுவயதில், பாம்பும் கீரியும் சண்டையிடும் கதைகளைக் கேட்டிருப்போம், பலமுறை பார்த்திருப்போம். தற்போது, ​​சமூக வலைதளங்களின் காலத்தில், பாம்புகள் மற்றும் கீரிகள் சண்டையிடும் வீடியோக்கள் பெரிதும் உலாவருகின்றன. பாம்பும் கீரியும் ஏன் இவ்வளவு பயங்கரமான எதிரிகள் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? பரஸ்பரம் பார்த்ததும் ஏன் ஒருவரை ஒருவர் கொல்லத் துடிக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாம்பின் விஷம் கீரியை பாதிக்காது


பாம்பு கீரியை எவ்வாறு தாக்குகிறது என்பதை கவனித்திருக்கிறீர்களா. கீரி பாம்பை படு வேகத்தில் தாக்குகிறது. ஒரு போராட்ட களத்தை அங்கே காணலாம். இதற்கு பல காரணங்கள் உள்ளன. பாம்புகளில் காணப்படும் விஷம் கீரியை பாதிக்காது எனக் கூறப்படுகிறது. இது தவிர, கீரி மிகவும் சுறுசுறுப்பானது, அது பாம்பிடமிருந்து தப்பிக்க பல வகையான சூழ்ச்சிகளை பின்பற்றுகிறது. மேலும் பொரும்பலான சண்டையில் கீரியே வெல்கிறது. சண்டையில் களைத்துப் போன பாம்பின் தலையை குதறி கொன்று விடுகிறது. 


கீரி தனது குட்டிகளை காக்க போராடுகிறது


பாம்பை தாக்காமல் விட்டு விட்டால், தன் குழந்தைகளை அதாவது சிறிய கீரிகளை கடித்து தின்றுவிடும் என்று கீரி நினைப்பதாக சில நிபுணர்கள் நம்புகின்றனர். ஏனெனில் பாம்புகளுக்கு கீரி குட்டிகளை உணவாக மிகவும் பிடிக்கும், இதனால் தான் கீரி தனது குழந்தைகளை காப்பாற்ற பாம்புகளுடன் சண்டையிடுகிறது என அவர்கள் கருதுகின்றனர்.


மேலும் படிக்க | Viral Video: கீரியின் கொடூரமான தாக்குதலில் சிக்கி சின்னாபின்னமான நாகப்பாம்பு!


 


இயற்கை எதிரி


அதே நேரத்தில், சில நிபுணர்கள் பாம்புகள் மற்றும் கீரிகள் இயற்கை எதிரிகள் என்று நம்புகிறார்கள். பாம்பு கீரியைக் கொல்ல விரும்புகிறது. பாம்பு தான் மட்டுமே வாழ வேண்டும் எனவும் கீரி தான் மட்டுமே வாழ வேண்டும் என்று பரஸ்பரம் தாக்கிக் கொள்கின்றன. இருப்பினும், இயற்கையான எதிரி என்பதற்கு ஆதரவான வாதத்தை பலர் ஏற்கவில்லை. ஏனெனில் கீரி பல சிறிய விலங்குகளை வேட்டையாடுவதில்லை என்று நம்பப்படுகிறது.


கீரி எந்த விதமான பாம்பையும் அழிக்கும்


மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் கீரி எந்த பாம்பையும் அழிக்கும் என்றும் கூறப்படுகிறது. கீரியின் உடலில் அசிடைல்கொலின் ரிஃப்ளெக்ஸ் உள்ளது. எனவே அது பாம்பு விஷத்தில் இருக்கும் நியூரோடாக்சினில் இருந்து காப்பாற்றப்படுகிறது. கீரியின் டிஎன்ஏவில் இருக்கும் ஆல்பா மற்றும் பீட்டா பிளாக்கர்ஸ் விஷத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கிறது. 


மொத்தத்தில் பாம்புக்கும் கீரிக்கும் உள்ள பகை பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்பது உண்மைதான். ஆனால் இந்தப் பகைக்குக் காரணம் என்ன, உறுதியான ஆதாரம் எங்கும் எழுதப்படவில்லை. ஆம், பரஸ்பரம் ஒன்றை ஒன்று பார்த்ததும் கோபத்தில் சிவந்து போவது நிச்சயம்.


மேலும் படிக்க | கொஞ்சம் விட்டிருந்தா சோலி முடிஞ்சிருக்கும், மலைபாம்புக்கு பல்பு: வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ