பெண்கள் எக்காலத்திலும் திறமைசாலிகளாக இருந்தாலும் அதை எக்காளமிட்டு சொன்னவர்கள் அல்ல. பெண்ணுக்கு தனி மரியாதை உலகில் உண்டென்றாலும், சிலபல காரணங்களால் அடக்கி வைக்கப்பட்ட பெண் சமுதாயம், உடல்ரீதியாக பலவீனமானது, ஆண்களை அண்டியே வாழ வேண்டும் என்ற நிலைமை இருந்தது, தற்போதும் பல இடங்களில் தொடர்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால் நிதர்சனமாக அப்படி ஏதும் இல்லை என்பது கண்கூடாக நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் பன்னெடுங் காலமாக பெண்கள் என்றும் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் பழங்கால சான்று ஒன்று, பெண்ணின் திறமையை, உடல் வலிமையை தைரியத்தை நிரூபிக்கிறது. 
அண்மையில் ஒரு அகழ்வாராய்ச்சியில், 17-19 வயதுடைய ஒரு பெண்ணின் எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டன. பெண்ணின் எச்சங்களுடன், வேட்டையாடுவதற்கு எறிபொருட்கள், புள்ளிகள், கத்தி, விலங்கை வெட்டுவதற்கும். அதை பிரித்தெடுப்பதற்கும் தேவையான கருவிகளும் கிடைத்தன. பண்டைய காலங்களில் வேட்டைக்காரர்களின் உருவத்தைப் பற்றி குறிப்பிடும்போது பொதுவாக நாம் தொடர்புபடுத்துவது ஆண்களை மட்டுமே. ஆனால், இந்த புதிய கண்டுபிடிப்பின்படி, பெண்கள் வேட்டையாடுவதிலும் சிறந்தவர்களாக இருந்திருக்கின்றனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.  


2018 ஆம் ஆண்டில் இன்றைய பெரு நாட்டில் விலாமயா பாட்ஜ்சாவில் (Wilamaya Patjxa) மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் கிடைத்தவற்றை ஆராய்ந்தபோது இந்த உண்மைகள் தெரியவந்துள்ளன.இந்தத் தகவலை இந்தியா டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது.


அந்த பண்டைய காலத்து பெண்ணின் எலும்புகளை ஆராய்ந்தபோது, அவர் இறைச்சி சாப்பிடும் வழக்கம் கொண்டவர் என்பது தெரியவந்தது.  


"ஆண்களே வேட்டைக்காரர்கள், பெண்கள் வேட்டையில் கிடைக்கும் மாமிசத்தை சேகரிப்பவர்கள் என்ற சித்தாந்தத்தை இந்தக் கண்டுபிடிப்பு உடைக்கிறது எங்கள் கண்டுபிடிப்புகள் பண்டைய வேட்டைக்காரர் குழுக்களின் மிக அடிப்படையான சமூக கட்டமைப்பை மறுபரிசீலனை செய்ய வைக்கின்றன. " என்று கலிபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில் பங்கெடுத்த மானுடவியலாளர் ராண்டி ஹாஸ் தெரிவித்தார்.


"வேட்டைக் கருவிகளைக் கொண்ட பெண்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, நடைமுறையில் உள்ள உலகக் கண்ணோட்டங்களுடன் பொருந்தவில்லை. பெண்கள் எக்காலத்திலும் வலிமையாக, அனைத்து பணிகளையும் செய்பவர்களாக இருந்தார்கள் என்பதை உறுதிப்படுத்தும் ஒரு வலுவான சான்றாக இந்த ஆராய்ச்சி இருக்கிறது" என்று அவர் கூறுகிறார்.


ப்ளீஸ்டோசீன் மற்றும் ஆரம்பகால ஹோலோசீனில் கண்டறியறிப்பட்ட புதைகுழிகளில், 107 இடங்களில் புதைக்கப்பட்டிருந்த 427 நபர்களின் எச்சங்கள் கண்டறியப்பட்டன.


அவற்றில், 27 பேருடன் வேட்டை உபகரணங்கள் இருந்தன.அந்த 27 பேரில் 11 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.  


பெண்கள் வேட்டையாடுவதிலும் நிபுணர்கள் என்பதை உறுதி செய்ய இந்த ஆய்வு போதுமான ஆதாரங்களை அளித்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆராய்ச்சியின் முடிவுகளை அவதானித்தால், பெண்கள் 9000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வேட்டையாடுவதிலும் நிபுணர்களாக இருந்திருக்கிறார்கள், அன்றும் அவர்கள் தற்சார்பு உடையவர்களாக வாழ்வதற்கான அமைப்பு இருந்தது என்பது தெளிவாகிறது.



கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR