‘அந்த நாய்க்கு ஒரு ஆஸ்கார் பார்சல்’: நடித்து ஏமாற்றிய நாய், வாய் பிளந்த நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

Funny Dog Video: ‘இது உலக மகா நடிப்புடா சாமி’ என இணையவாசிகளை ஒரு வீடியோ கூற வைத்துள்ளது. இது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.
வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.
சலிப்பாக இருக்கும் போது நண்பர்களிடம் பேசி அல்லது ஏதாவது கேம் விளையாடி நம்மை நாமே மகிழ்வித்துக்கொள்ள முயற்சிப்போம். சில சமயங்களில், நாம் அவர்களிடம் சில குறும்புகளை செய்யவும் முயற்சிப்போம். ஆனால் மனிதர்களாகிய நாம் மட்டும் குறும்பு செய்வதல்ல. சில விலங்குகள் மற்றும் பறவைகளும் இப்படிப்பட்ட குறும்புகளை செய்வதுண்டு. நிறத்தை மாற்றிக்கொள்வது, இறந்தது போல நடிப்பது, அவற்றின் உண்மையான அளவை விட மிகவும் பெரியதாக தோற்றமளிக்க தங்கள் உடலை மாற்றுவது என விலங்குகளும் பல சித்து வேலைகளை செய்வதுண்டு. இவற்றின் பல வீடியோக்களும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.
சமீபத்தில் வெளியான ஒரு வீடியோவில் இதுபோன்ற ஒரு காட்சியை காண முடிகின்றது. ஒரு நாய், தனது நாய் தோழன் இறந்துவிட்டதாக எண்ணி, அதை எழுப்ப மீண்டும் மீண்டும் முயற்சி செய்கிறது. அந்த நாயை கால்களால் இழுத்து, குலுக்கி, நக்கி எழுப்ப அது முயற்சிக்கிறது. ஆனால், எந்த பலனும் இல்லை. ஒரு நபர் அருகில் நின்று இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார். அந்த நாய் இறந்துவிட்டது என அவருக்கும் தோன்றுகிறது. அதை அங்கிருந்து அப்புறப்படுத்த, அதன் காலை பிடித்து அவர் இழுக்கிறார். ஆனால், அப்போது திடீரென் இறந்ததாக நினைக்கப்பட்ட நாய் எழுந்து ஓடுகிறது. இதனால் மற்ற நாய்க்கும், அந்த நபருக்கும் பெரும் அதிர்ச்சி ஏற்படுகின்றது. மற்றொரு நாயும் அந்த நாயின் பின்னால் ஓடுகிறது.
மேலும் படிக்க | Viral Video: பாம்பின் கண்களை நோண்டி எடுத்து சித்திரவதை செய்யும் சின்னஞ்சிறு பறவை!
அட்டகாசமான வைரல் வீடியோவை இங்கே காணலாம்:
இந்த வீடியோ ட்விட்டரில் @ChannelInteres என்ற பக்கத்தில் “இறுதிவரை பாருங்கள்!” என்ற தலைப்புடன் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ