குரங்கோட குசும்ப பாத்தீங்களா? கல்யாணத்துல செஞ்ச கலாட்டா, ஷாக் ஆன மணமக்கள்: வைரலான வீடியோ

Monkey in Marriage Video: இதை பார்த்தால் உங்களால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. திருமணம் ஒன்றில் குரங்கு செய்யும் கலாட்டாவின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 22, 2023, 01:06 PM IST
  • குரங்கு தனது குறும்புகளுக்கு பெயர் பெற்றது.
  • குரங்குகளின் பல குறும்பு வீடியோக்கள் அவ்வப்போது சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.
  • இவை செய்யும் குறும்பை பார்த்தால் ஒரு பக்கம் அச்சமாக இருந்தாலும், ஒரு பக்கம் வேடிக்கையாகவும் இருக்கும்.
குரங்கோட குசும்ப பாத்தீங்களா? கல்யாணத்துல செஞ்ச கலாட்டா, ஷாக் ஆன மணமக்கள்: வைரலான வீடியோ

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

Add Zee News as a Preferred Source

குரங்கு தனது குறும்புகளுக்கு பெயர் பெற்றது. குரங்குகளின் பல குறும்பு வீடியோக்கள் அவ்வப்போது சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. இவை செய்யும் குறும்பை பார்த்தால் ஒரு பக்கம் அச்சமாக இருந்தாலும், ஒரு பக்கம் வேடிக்கையாகவும் இருக்கும். 

தற்போதும் குரங்கின் குறும்பு வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் ஒரு குரங்கு திருமணத்திற்குள் நுழைந்து அட்டகாசம் செய்வதை காண முடிகின்றது. அந்த குரங்குக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லை போலும். குரங்கு மணமகன் மற்றும் மணமகளின் தலை மீது ஏறி செய்யும் வேலையை வீடியோவில் காண முடிகின்றது. 

அட்டகாசம் செய்த குரங்கு 

வைரலாகி வரும் இந்த வீடியோவில், மணமக்கள் திருமண சடங்குகளில் மும்முரமாக இருப்பதைக் காண்கிறோம். யாரும் எதிர்பாராத வண்ணம் அது மாப்பிள்ளையின் தலை மீது ஏறி அவர் தலைமுடியை பிடித்து இழுக்கிறது. இதனால் என்ன நடக்கிறதென்றே புரியாமல் மணமகன் ஷாக் ஆகிறார். இதோடு குரங்கு நிறுத்தவில்லை. அடுத்தது அது மணமகனின் தலையிலிருந்து மணமகளின் தலைக்கு மேல் தாவுகிறது. 

மேலும் படிக்க | முகூர்த்த புடவை 17 கோடி, நகை 90 கோடி, மேக்கப்புக்கு 30 லட்சம்! ரூ.500 கோடியில் நடந்த திருமணம்! 

இதனால் மணமக்கள் மட்டுமல்லாமல் அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். குரங்கின் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

குரங்கின் அட்டகாச வீடியோவை இங்கே காணலாம்: 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

திருமணத்தில் அட்டகாசம் செய்த குரங்கின் வீடியோ சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற ஒரு திருமண கலாட்டாவை நம்மில் பலர் பார்த்திருக்க முடியாது. குரங்கின் இந்த குறும்பு வீடியொ இன்ஸ்டாகிராமில் telugu.beats என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு இதுவரை 2.5 லட்சத்திற்கும் அதிகமான வியூஸ்களும் ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | சின்னபுள்ளதனமால்ல இருக்கு!!: மணமேடையில் டென்ஷன் ஆன மாப்பிள்ளை, வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

About the Author

Sripriya Sambathkumar

Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. 

She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.

...Read More

Trending News