Viral Video: பாம்பின் கண்களை நோண்டி எடுத்து சித்திரவதை செய்யும் சின்னஞ்சிறு பறவை!

பாம்புகள் என்றாலே படையே நடுங்கும் என கூறுவார்கள். ஆனால் இங்கே சின்னஞ்சிறு பறவை பாம்பை புரட்டி எடுப்பதோடு மட்டுமல்லாமல் அதன் கண்களை நோண்டி எடுத்து சித்திரவதை செய்கிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 22, 2023, 03:58 PM IST
  • சமூக ஊடகங்களில் பகிரப்படும் சில வீடியோக்கள் நம்மை அழ வைத்து விடுகின்றன.
  • பச்சை பாம்பு ஒன்று சாலையில் இருப்பதையும், அதனை ஒரு சின்னஞ்சிறிய பறவை சித்திரவதை செய்வதையும் காணலாம்.
  • பாம்புகள் என்றாலே படையே நடுங்கும் என கூறுவார்கள்.
Viral Video: பாம்பின் கண்களை நோண்டி எடுத்து சித்திரவதை செய்யும் சின்னஞ்சிறு பறவை! title=

சமூக வலைதளங்களில் மக்களை வியப்பில் ஆழ்த்தும் அல்லது அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் அல்லது ஆச்சரியப்படுத்தும் பல தகவல்களை காணலாம்.  விலங்குகள் குறிப்பாக பாம்புகள் தாக்கும் பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தினமும் கவனம் பெற்று வருகிறது. பாம்புகள் என்றாலே படையே நடுங்கும் என கூறுவார்கள்.  ஆனால், சில வீடியோக்களில் காணப்படும் காட்சிகள் நம்பவே முடியாததாக இருக்கும். சமூக ஊடகங்களில் அதிகம் கவனம் பெறும் சில வீடியோக்கள் அந்த வகையை சேர்ந்தவை தான். பறவைகள் பார்க்க சிறியவை, மிகவும் மென்மையானவை என்ற எண்ணம் பலருக்கு இருக்கும். அனால், இதனை பார்த்தால் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டு விடுவீர்கள். 

சமூக ஊடகங்களில் பகிரப்படும் சில வீடியோக்கள் நம்மை அழ வைத்து விடுகின்றன. விலங்கு வீடியோக்களுக்கு ரசிகர்கள் அதிகம். அதிலும் பாம்பு வீடியோக்கள் அதிக கவனம் பெறுகின்றன. தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள வீடியோவில், பச்சை பாம்பு ஒன்று சாலையில் இருப்பதையும், அதனை ஒரு சின்னஞ்சிறிய பறவை சித்திரவதை செய்வதையும் காணலாம். அதன் அலகிலும், பாம்பின் கண்களின் இருந்தும் ரத்தம் வருவதையும் காணலாம்.

சின்னஞ்சிறிய பாம்பின் கண்களை நோண்டு எடுக்கும் வைரல் வீடியோ!

பாம்புகள் என்றாலே படையே நடுங்கும் என கூறுவார்கள். ஆனால் இங்கே சின்னஞ்சிறு பறவை பாம்பை புரட்டி எடுப்பதோடு மட்டுமல்லாமல் அதன் கண்களை நோண்டி எடுத்து சித்திரவதை செய்கிறது. கோபமான இந்த பறவையின் தாக்குதலை தாக்குப்படிக்க முடியாமல், பாம்பு திணறுவதைக் காணலாம். இது Latest Sightings - Kruger கணக்கின் மூலம் பகிரப்பட்ட காணொளி. மிகவும் ஆபத்தான பூம்ஸ்லாங் வகையைச் சேர்ந்த பாம்பை பறவைகள் குழு ஒன்று தாக்கும் வீடியோ இது. இந்த வீடியோவை ஏற்கனவே 1.6 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.  ஆயிரக்கணக்கானோர் தங்கள் கமெண்டுகளையும் பதிவு செய்துள்ளனர். 

மேலும் படிக்க | Viral Video: சிங்கங்களிடம் சிக்கி தவித்த முதலை! வனத்தில் ஒரு உயிர் போராட்டம்!

மேலும் படிக்க | Viral Video: மயக்கும் நடனத்தால் காதலிக்கு தூது விடும் காட்டுக் கோழி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News