உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் வீட்டு வளப்பு நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. மேலும் இந்த வீட்டு வளப்பு நாய்களின் தாக்குதலால் மக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர். தற்போது அப்படிப் பட்ட ஒரு பயங்கரமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெளியான வீடியோ கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு சொசைட்டியில் அரங்கேறிள்ளது. லிப்டில் இருந்த நாய் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த சிறுவனை சரமாரியாக கடித்துள்ளது. இதனால் அந்த சிறுவன் பலத்த காயமைந்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லா-ரெசிடென்சியா சொசைட்டியின் நிகழ்வு
இந்த திகிலூட்டும் வீடியோ நவம்பர் 15 ஆம் தேதி அன்று @siddharth2596 என்கிறவரால் ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது. கிரேட்டர் நொய்டா மேற்கில் உள்ள லா-ரெசிடென்சியா சொசைட்டி லிப்டில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த சிறுவனை வீட்டு வளப்பு நாய் ஒன்று தாக்கியதாக கூறப்படுகிறது. அந்த சிறுவனின் கையை மூன்று இடங்களில் நாய் கொடூரமாக கடித்ததுள்ளது. நாயின் உரிமையாளர் கையில் ஒரு குச்சி இருந்தபோதிலும், குழந்தைக்கு தீங்கு விளைவித்திருப்பது அதிர்ச்சியளிக்கும் விஷயமாகும்.


மேலும் படிக்க | 'தாத்தா இது தேவையா’: பெண்ணை பார்த்து முதியவர் செய்த செயல், ஷாக் ஆன நெட்டிசன்கள் 


வீடியோவை இங்கே பார்க்கவும்



கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது
வெளியான பத்து வினாடி வீடியோவில், தாய் தன் மகனுடன் லிப்டில் இருந்து வெளியேறுவதைக் காணலாம். ஆனால் அவள் லிப்டில் இருந்து வெளியே வருவதற்குள், ஒரு நபர் நாயுடன் லிப்டில் நுழைந்தான். அந்த நாய் ஒரு நொடியில் குழந்தையைத் தாக்கியது மற்றும் அவரது கையை கடித்தது. இதனால் குழந்தை மோசமாக கத்த, நாயின் உரிமையாளர் எப்படியோ நாயை பின்னுக்கு இழுத்துள்ளார். ஆனால் அதற்குள் நாய் தன் வேலையைச் செய்து விட்டது. 


தற்போது இந்த சம்பவத்தின் வீடியோ வெளியானதையடுத்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையில் சமீப காலமாக டெல்லி-என்.சி.ஆர் பகுதியில் நாய்கள் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவது தெரிவிக்கப் பட்டுள்ளது.


மேலும் படிக்க | பள்ளியில் மாணவி செய்ய வேண்டிய செயலா இது: வீடியோ வைரல் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ