மனிதர்கள் தொடங்கி நாய், பூனை வரை அனைத்து உயிரினங்களுக்கும் துணை உள்ளனர், பெரும்பாலானவர்களுக்கு குடும்பத்தினர், உறவினர்களுடன் நேரத்தை செல்வது செய்வதை காட்டிலும் நண்பர்களுடனும், தனது ஜோடியுடனும் நேரத்தை செலவு செய்வது பிடித்தமானதாக இருக்கும்.  உறவினர்களுடன் வெளியில் செல்வதை நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று, நண்பர்களுடன் இருக்கும்போது தான் நாம் நாமாக இருக்க முடியும், அவர்களுடன் சேர்ந்து அரட்டை அடிப்பது, சண்டை போடுவது, ஆடுவது, பாடுவது என மகிழ்ச்சியான பல விஷயங்களை தயக்கமில்லாமல் செய்ய முடியும்.  மனிதர்கள் மட்டும் தான் அவர்களது நண்பர்களுடன் நேரத்தை செலவு செய்வார்களா என்றால் இல்லை, விலங்குகளும் அதன் ஜோடிகளுடன் தங்களது நேரத்தை மகிழ்ச்சியாக செலவு செய்கிறது என்பதை தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | நாகப்பாம்பின் தலையை வெட்டி நாகமணியை எடுத்த நபர்: பதற வைக்கும் வைரல் வீடியோ


நாய்களும் நல்ல நண்பர்கள் என்பதை காண்பிக்கும் வகையில் ஒரு வீடியோ ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.  பழுப்பு நிறம் மற்றும் கருப்பு நிறத்தில் இரண்டு நாய்கள் வெளியில் சென்றுள்ளது, ஒரு காட்டுப்பகுதியில் மனிதர்கள் போல அழகாக ஊஞ்சல் ஒன்றை கட்டி அதில் அந்த இரண்டு நாய்களும் படுத்துக்கொண்டு சொகுசாக ஊஞ்சல் ஆடிக்கொண்டு இருக்கிறது.  அமைதியான காட்டுப்பகுதி மற்றும் நீர்சூழ்ந்த அந்த பகுதியில் அந்த இரண்டு நாய்களும் தங்களது விடுமுறையை மகிழ்ச்சியை கழித்துக்கொண்டு இருக்கின்றது.


 



இந்த இரண்டு நாயின் வீடியோவை பார்த்த இணையாவசிகள் பலருக்கும் தங்களது நபர்களுடன் இப்படி ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்கிற ஆசை எழுந்துள்ளது.  இணையத்தில் பகிரப்பட்டு இருக்கும் இந்த வீடியோவை இதுவரை பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட இணையாவசிகள் பார்த்து ரசித்துள்ளனர் மற்றும் இந்த வீடியோவிற்கு பல லைக்குகளும், கமெண்டுகளும் குவிந்து வருகிறது.


மேலும் படிக்க | Viral Video: ராஜநாகத்துடன் ஒரு உல்லாச நடனம் ஆடும் அதிசய இளைஞர்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ