வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாய்கள் மிகவும் விரும்பப்படும் செல்லப்பிராணிகள். நாய்கள் மனிதனின் சிறந்த நண்பர்களாக பார்க்கப்படுகின்றன. வீட்டில் நாய் உள்ளவர்கள் அவற்றையும் வீட்டின் உறுப்பினர்களாகவே பார்க்கிறார்கள். நாய்களும் வீட்டில் உள்ள நபர்களுடன் அளவு கடந்த பாசத்துடன் நடந்துகொள்கின்றன. சமூக ஊடகங்களில் நாய்களின் பல வீடியோக்கள் தினம் தினம் பகிரப்படுகின்றன. இவற்றுக்கு இணையவாசிகளிடம் அதிக வரவேற்பும் கிடைக்கின்றன. 


சமீப காலங்களில் நாய்கள் வன்முறை செயல்களில் ஈடுபட்ட பல சம்பவங்கள் பற்றி நாம் அதிகம் கேள்விப்படுகிறோம். இந்தச் செய்திகளைப் படித்ததும் நாய்களைப் பற்றிய பீதி அனைவர் மனதிலும் எழுவது இயல்பு. எனினும், அனைத்து நாய்களும் அப்படி இருப்பதல்ல. நாய்கள் மனிதர்களின் நண்பர்கள் என்பதை நிரூபிக்கும் விதத்திலும் பல நாய்கள் உள்ளன. இதை உணர்த்தும் பல வீடியோக்களும் இணையத்தில் பகிரப்பட்டுள்ளன. 


சமீபத்திலும் அப்படி ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ மிக அழகாகவும், வித்தியாசமாகவும், நம்பிக்கை ஊட்டும் வகையிலும் உள்ளது. இதை பார்த்தவுடன் உங்களுக்கு நாய்கள் மீது காதல் வருவதோடு உங்கள் மனதில் இருந்த பயமும் முற்றிலும் நீங்கும். இந்த வீடியோ கண்டிப்பாக உங்கள் மனதைத் தொடும் என்பதை மறுப்பதற்கில்லை.


இவ்வளவு அடக்கமான, உதவக்கூடிய நாயை பார்த்திருக்க முடியாது


இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரலான இந்த வீடியோவில் ஒரு நாயை காண முடிகின்றது. அதன் வாயில் குடை ஒன்று இருப்பது பல கேள்விகளை எழுப்புகின்றது. மேலும், ஒரு வயதான நபரும் வீடியோவில் காணப்படுகிறார். வீடியோவைப் பார்த்தாலே அது அந்த முதியவருடன் வசிக்கும் செல்ல நாய் என்று யூகிக்க முடிகிறது. 


இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், நாய் அந்த முதியவருக்கு மிக அழகாக உதவுவதுதான். அது முற்றிலும் முதியவருக்கு அடிபணிந்து இருப்பதை வீடியோவில் காண முடிகின்றது. முதியவர் ஒரு கட்டத்தில் ஒருவருடன் பேசிக்கொண்டு இருக்கும்போது அந்த நாய் வாயில் குடையுடன் அவருக்காக காத்துக்கொண்டு இருப்பதை வீடியோவில் பார்க்கிறோம். இது மிகவும் கியூட்டாக உள்ளது. அவர் சாலையில் நடக்கும்போது, அந்த நாய் அவருக்காக அவரது குடையை வாயில் கவ்வியபடி அவருக்கு முன்னால் செல்கிறது. 


இந்த வீடியோவை பார்ப்பவர்களால் அந்த நாயை பாராட்டாமல் இருக்க முடியாது. அந்த நாய் மீது சட்டென்று ஒட்டுதல் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த முதியவர் கண்களிலும் நாய்க்கான பாசமும் அன்பும் தெரிகிறது. அன்பு, பாசம் அனைத்தும் ஒரு கை ஓசை அல்ல. இரு பக்கமும் இருந்தால் தான் அவை தழைத்து ஓங்கும். 


மேலும் படிக்க | வாரி அணைத்து முத்தம் கொடுத்த சிங்கங்கள், பாச மழையில் நனைந்த நபர்: நம்பவே முடியாத வைரல் வீடியோ


மனதை மயங்க வைக்கும் நாயின் வீடியோவை இங்கே காணலாம்:



வீடியோ இணையத்தில் வைரல் ஆனது 


இந்த வீடியோவை சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் Sunil Kamath என்ற பயனரால் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல விதமான கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். ‘உண்மையான அன்பு என்ன என்று கேட்பவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டும்’ என ஒரு பயனர் கூறியுள்ளார். ‘நாய்களைப் பார்த்தாலே அவை மனிதர்களை விட சிறந்தவை என்று தோன்றுகிறது’ என மற்றொரு பயனர் தெரிவித்துள்ளார். ‘நாய்கள் மனிதர்களின் சிறந்த நண்பர்கள் என்பதை விளக்க இதை விட ஒரு நல்ல உதாரணம் இருக்க முடியாது’ என மற்றொரு பயனர் நாய்களை பாராட்டியுள்ளார்.  தன் எஜமானனுக்காக அவர் குடையை சுமந்து, அவர் போகும் இடமெல்லாம் அவருக்கு பாதுகாப்பாக சென்று, அவருக்காக காத்திருந்து தன் கடமையை செய்யும் அந்த நாய் அனைவரது நெஞ்சங்களிலும் சிம்மாசனம் இட்டு அமர்ந்துள்ளது. 


மேலும் படிக்க | பாம்பை வெச்சி செஞ்சி பதம் பார்த்த தம்மாதுண்டு எறும்புகள்.. வீடியோ வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ