வாரி அணைத்து முத்தம் கொடுத்த சிங்கங்கள், பாச மழையில் நனைந்த நபர்: நம்பவே முடியாத வைரல் வீடியோ

Unbelievable Lion Video: இந்த வீடியோவை பார்த்தால் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. திகிலான அன்பை காட்டும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 18, 2023, 05:37 PM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் wildlife011 என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது.
  • கண்டிப்பாக நம்ப முடியாத அந்த வீடியோவை இங்கே காணலாம்.
  • இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன.
வாரி அணைத்து முத்தம் கொடுத்த சிங்கங்கள், பாச மழையில் நனைந்த நபர்: நம்பவே முடியாத வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம். 

காட்டின் அரசனான சிங்கம் மிக பயங்கரமான மிருகமாகும். மனிதர்கள், பிற மிருகங்கள் என யார் தன் முன்னால் வந்தாலும் இது விட்டு வைப்பதில்லை. சமூக ஊடகங்களில்  சிங்கங்களின் பல விடியோகக்ளை நாம் பார்த்துள்ளோம். இவற்றில் சிங்கத்தில் கம்பீரமான தோற்றத்தையும் ஒய்யாரமான உறுதியையும் கண்டு நாம் வியந்துள்ளோம். சிங்கங்கள் வலிமையானவை, சக்தி வாய்ந்தவை, பிரமிக்க வைக்கும் ஆற்றல் கொண்டவை. அவற்றுடன் போட்டி போடும் திறன் எந்த விலங்குக்கும் கிடையாது. ஏனெனில் அவற்றின் நகங்களில் எவ்வளவு வலிமை இருக்கிறதோ, அதே வலிமை அவற்றின் தாடைகளிலும் உள்ளது. 

சிங்கங்கள் தொடர்பான வீடியோக்கள் சமூக தளங்களில் அடிக்கடி வைரலாகி வருகின்றன. அதில் காட்டில் உள்ள மற்ற விலங்குகளை அவை இரையாக ஆக்குவதைக் காணலாம். இப்போது இணையத்தில் ஒரு சிங்கத்தின் வீடியோ பகிரப்பட்டுள்ளது. இதைப் பார்த்தால், பார்ப்பவர்கள் கண்டிப்பாக திகைத்துப்போவார்கள் என்பதில் சந்தேகமில்லை. 

நபரை கொஞ்சித் தீர்க்கும் சிங்கங்கள்

காட்டில் ஒருவர் சுற்றித் திரிவதையும் அப்போது அவர் மீது சிங்கம் ஒன்று பாய்வதையும் வீடியோ -வின் துவக்கத்தில் காண முடிகின்றது. ஒரு சிங்கம் மட்டுமல்ல, ஆண் சிங்கம் பெண் சிங்கம் என இரு சிங்கங்களும் அவர் மீது பாய்கின்றன. இதை பார்த்து நம் இதயம் ஒரு நிமிடம் நின்று விடுகின்றது. ஏனென்றால், அந்த சிங்கம் அந்த நபரை விட பெரிதாக உள்ளது. அடுத்து என்ன நடந்திருக்கும் என்று இப்போது உங்கள் மனதில் சில கேள்விகள் வந்துகொண்டே இருக்கும். அந்த நபரின் உயிர் காப்பாற்றப்பட்டதா இல்லையா? இரு சிங்கங்களும் சேர்ந்து அந்த நபரை தின்றுவிட்டனவா? ரத்த வெள்ளம் ஓடியதா? ஆனால், இப்படி எதுவுமே நடக்கவில்லை. இந்த வீடியோவில் இரு சிங்கங்களும் போட்டிபோட்டுக்கொண்டு அந்த நபர் மீது அன்பை பொழிவதை காண முடிகின்றது. இதை பார்க்க ஆச்சரியமாகவும் ஆறுதலாகவும் உள்ளது.  

மேலும் படிக்க | பாம்பை வெச்சி செஞ்சி பதம் பார்த்த தம்மாதுண்டு எறும்புகள்.. வீடியோ வைரல்

பாச மழை பொழியும் ஆண் சிங்கமும் பெண் சிங்கமும் 

அந்த நபரைக் கண்டதும் ஒரு சிங்கம் வேகமாக ஓடி அவர் மீது ஏறி, அவரை சாய்த்து தரையில் படுக்க வைத்தது. ஆனால், அது அவரைத் தாக்கவில்லை. இரு சிங்கங்களும் அவரை கட்டி அணைத்து பாசத்தை பொழிந்தன. அந்த நபரும் அவற்றின் பாசத்தை சிரித்துக்கொண்டே திறந்த மனதுடன் ஏற்றுக்கொண்டார். 

கண்டிப்பாக நம்ப முடியாத அந்த வீடியோவை இங்கே காணலாம்:

அதிர்ச்சியில் பயனர்கள், வைரல் ஆகும் வீடியோ

மிருகம் நாயாக இருந்தாலும் சிங்கமாக இருந்தாலும், பாசத்தை காட்டும்போது எந்த குறையும் வைப்பதில்லை. அதை இந்த வீடியோ மூலம் நன்றாக புரிந்துகொள்ள முடிகின்றது. இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் wildlife011 என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டிகளை அளித்து வருகிறார்கள். சிங்கத்துடனான மனிதர்களின் இத்தகைய பிணைப்பை நாம் பெரும்பாலும் வேறு எங்கு அதிகம் பார்த்திருக்க முடியாது.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | டைம் டிராவல் செய்த பெண்.. உலகையே திரும்பி பார்க்க வைத்த வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News