வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாம்புகள் விஷத்தன்மை கொண்டவை என்பதால் அவை கொடிய மிருகங்களாக பார்க்கப்படுகின்றன. பாம்புகளின் விஷம் மனிதர்கள், விலங்குகள் என அனைவருக்கும் மிக ஆபத்தானது. ஆகையால், மனிதர்கள் மட்டுமல்லாமல் பெரும்பாலான விலங்குகளும் பாம்புகளிடமிருந்து விலகி இருக்கவே ஆசைப்படுகிறார்கள். எனினும், சில விலங்குகள் பாம்புகளையும் துணிவுடன் எதிர்கொள்கின்றன. இந்த விலங்குகளின் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பார்த்து மக்கள் திகைப்பதுண்டு. அப்படி ஒரு வீடியோ தற்போதும் பகிரப்பட்டுள்ளது. 


சமீப காலங்களில், வீடுகளில் வளர்க்கப்படும் செல்ல நாய்கள் மற்றும் பூனைகள் பாம்புகளுடன் மிக ஆக்ரோஷமாக சண்டையிடும் பல வீடியோக்களை நாம் இணையத்தில் அதிகமாக காண்கிறோம். தற்போது இதே போன்ற மற்றொரு வீடியோ வெளியாகியுள்ளது. இது நாய்கள் மிகவும் விசுவாசமானவை மற்றும் தைரியமானவை என்பதை மீண்டும் நமக்கு நிரூபிக்கிறது. தங்கள் முதலாளிக்கு ஒரு பிரச்சனை என்றால், அதை சரி செய்ய முதல் ஆளாக இவை வந்து நிற்கும் என்று கூறினால் அது மிகையாகாது. 


மேலும் படிக்க | Viral Video: பறவையை கொத்த முயன்ற விஷப்பாம்பு! அசால்டாக முறியடித்த பறவை!


பாம்பை வெளியே இழுத்து பதம் பார்த்த நாய் 


வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு நபர் தனது வயலில் நிறுத்தப்பட்டிருந்த இயந்திரத்தில் எதையோ தேடுவதை காண முடிகின்றது. வீடியோவைப் பார்க்கும்போது, ​​இயந்திரத்தில் ஒரு பாம்பு ஒளிந்திருக்கிறது என்றும், அதை எடுக்கத்தான் அவர் கடுமையாக முயற்சி செய்கிறார் என்பதையும் யாராலும் நம்ப முடியாது.


வீடியோவைப் பார்த்த பயனர்கள் ஆச்சரியமடைந்தனர்


அந்த நபருடன் அவரது வளர்ப்பு நாயும் வேகமாக இயந்திரத்தின் உள்ளே சென்று அவருக்கு உதவ முயற்சி செய்கிறது. அவ்வளவு நேரமாக அந்த நபர் முயன்றுகொண்டிருக்க, பாம்பு அந்த வேலையை நிமிடங்களில் முடித்து விடுகிறது. அங்கு மறைந்திருந்த பாம்பை வாயால் பிடித்து வயலுக்கு கொண்டு செல்கிறது. விஷம் கொண்ட பாம்பை நாய் முழு தைரியத்துடன் எதிகொள்கிறது. பாம்பை வாயால் பிடித்து காற்றில் வேகமாக சுழற்றி அதன் நிலைமையை மோசமாக்குகிறது. 


நாயின் இந்த ஆக்ரோஷமான செய்கைக்கு முன்னால் பாம்பால் எதுவும் செய்ய முடியவில்லை. அது உடனடியாக தோல்வியை ஒப்புக்கொண்டு விடுகிறது. 


நாயின் விசுவாசத்தை விளக்கும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:



இந்த வீடியோ AF Ranch என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இதற்கு இணையவாசிகள் பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். நாயின் தைரியத்தையும், தன்னை வளர்க்கும் நபருக்காக எதையும் செய்ய முனைப்புடன் இருக்கும் துணிவையும் அனைவரும் பாராட்டி வருகிறார்கள். 


மேலும் படிக்க | 'அய்யோ...' நாய் குட்டிகள் முன் படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு... விடாமல் கத்திய தாய் நாய்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ