அனைவருக்கும் பிடித்தமான வளர்ப்பு பிராணியாக நாய் இருக்கிறது. ஒரு நாயை பராமரிப்பது சாதாரணமான விஷயமல்ல அது மிகபெரிய வேலை. அதுமட்டுமின்றி ஒரு நாயுடன் மற்றொரு நாயை இணைத்து வைத்து பாதுகாப்பது என்பது எளிதானதல்ல.  ஒரு நாய் மற்றொரு நாயுடன் பழகுவது மெதுவான செயல்பாடாக இருக்கிறது.  இருப்பினும் சில சமயம் இரண்டு நாய்களும் ஜெல் ஆகாமல் போகும் வாய்ப்பும் உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | குட்டிக்கரணம் போடும் ‘குண்டு’ பாண்டா - இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ


சமோய்ட் மற்றும் ஆஸ்திரேலிய ஷெப்பர்ட் நாய்களான யூகி மற்றும் மேப்பிள் ஆகியவற்றின் வீடியோ ஒன்று சமீபகாலமாக இணையத்தில் வைரலாகி வருகிறது.  இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே சுமார் 37,000 பின்தொடர்பவர்களை கொண்ட கேனைன் ஜோடி, தற்போது டிக்டாக்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  அந்த வீடியோவில், யூகி நாய்க்குட்டியானது மேப்பிள் நாய்க்குட்டியை இழுத்து, பாசமாக கட்டிப்பிடிக்கிறது.  இந்த வீடியோ இதுவரை 6.7 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.



அதனையடுத்து மற்றொரு வீடியோவில், யூகி மற்றொரு சிறிய நாய்க்குட்டியான அதன் தங்கையை எப்படி வரவேற்கிறது என்பதை காண்பிக்கிறது.  இருப்பினும் இரண்டு நாய்களும் ஒன்றையொன்று கட்டி தழுவும் வீடியோ தான் அதிகமானோரை ஈர்த்து இருக்கிறது.  அந்த வீடியோவுடன் 'இது மிகவும் மதிப்பு வாய்ந்தது' என்கிற கேப்ஷன் பதிவிடப்பட்டுள்ளது.  இந்த வீடியோ நாய் பிரியர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.


ஒரு புதிய நாயின் அறிமுகமானது பிரச்சனைகளை ஏற்படுத்துவதாக அமைகிறது.  அமெரிக்கன் காலேஜ் ஆஃப் வெட்டர்னரி பிஹேவியர்ஸ்டுகளின் அறிக்கையின்படி, இந்த புதிய நாய் வருகையின்போது ஏற்படும் மாற்றமானது பழைய நாய்க்கு சில நன்மையை ஏற்படுத்தும் விதமாகவும் அமையலாம் என்று கூறுகிறது.  புதிய நாயின் நடத்தையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள், பழைய நாய்க்கு பயனை அளிக்கிறது. அதிக பயத்தை கொண்டுள்ள நாய்கள், அவற்றுடன் துணைக்கு ஒரு நாய் இருக்கும்போது மிகவும் பாதுகாப்பானதாக உணர்கிறது.


மேலும் படிக்க | சண்டையில் சிக்கிய மான்களின் கொம்புகள்; தாக்க வரும் சிறுத்தை; நடந்தது என்ன..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR