என் பிரண்ட போல யாரு மச்சான்! சேர் தூக்க உதவி செய்யும் நாய்க்குட்டி!
நாய் ஒன்று அதன் உரிமையாளர்களுக்கு நாற்காலியை அடுக்கிவைக்க ஓடோடி உதவி செய்யும் காட்சி இணையத்தில் வைரலாகி பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
பொதுவாக நாய் என்றாலே நாம் நன்றியுள்ள பிராணி என்றுதான் புகழ்ந்து கூறுவோம், அவற்றின் நன்றியுணர்ச்சியை நிரூபிக்கும் விதமாக பல செயல்களை நாம் கண்ணால் பார்த்தும் காதால் கேட்டும் வருகிறோம். முதலாளியை காப்பாற்றுவதற்காக பாம்பிடம் கடி வாங்கி நாய் உயிரைவிட்ட சம்பவம், விபத்திலிருந்து உரிமையாளரை காப்பற்றியது போன்ற பல சம்பவங்களை நாங்கள் அடிக்கடி பார்த்தும், கேட்டும் வருகிறோம். பெரும்பாலான மக்களுக்கு நாய்கள் தான் செல்லப்பிராணிகளாக இருக்கின்றன, அவர்கள் அவற்றை தங்களது குழந்தை போல பாவித்து வீடுகளில் பாசமாக வளர்த்து வருகின்றனர். நாய்கள் நன்றியுணர்ச்சியை காட்டுவதில் மட்டுமின்றி நமக்கு மிகவும் உதிவிகாரமான வேலைகளை செய்யும் என்பதற்கு எடுத்துக்காட்டாக தற்போது இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது.
அந்த வைரல் வீடியோவை பார்த்ததும், நாய் நமக்கு இந்தளவு உதவிகளையும் செய்யுமா என்று ஆச்சரியமாக இருக்கிறது. அந்த வீடியோவானது ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது. அந்த வைரல் வீடியோவில், ஒரு பழைய இரும்பு கடை போன்ற கடை இருக்கிறது, அங்கு இரண்டு நபர்கள் நின்றுகொண்டு இருக்கின்றனர். அவர்கள் அந்த இடத்தில் இடையூறாக இருக்கும் சில பொருட்களை அகற்றி மேலே வைக்க எண்ணி அதற்கான செயல்முறையில் இறங்கியுள்ளனர். மேலே அந்த பொருட்களை அடுக்கி வைப்பதற்கு அவர்களுக்கு உதவிசெய்வது அவர்கள் வளர்க்கும் நாய். இந்த இரண்டு நபர்களும் கீழே நின்றுகொண்டு நாற்காலிகளை எடுத்து கொடுக்க அந்த நாய் குடுகுடுவென்று வேகமாக ஓடி அவர்கள் தருகின்ற நாற்காலிகளை வாங்கி அடுக்கி வைக்கின்றது.
மேலும் படிக்க | உ.பியில் காவலர்கள் போட்ட நாகினி நடனம்; வைரல் வீடியோ
மனிதர்கள் செய்ய வேண்டிய வேலையை இந்த நாய் செய்வது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. ஆகஸ்ட்-19ம் தேதி இணையத்தில் பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோவை பல்லாயிரக்கணக்கான இணையாவசிகள் பார்த்து ரசித்துள்ளனர். இதுவரை நாயின் இந்த வீடியோவை எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட இணையவாசிகள் லைக் செய்துள்ளனர் மற்றும் பலர் கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க | Viral Video: இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியலை... கிரேனில் ஸ்கூட்டருடன் தொங்கும் நபர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ