சமூகவலைதளங்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், ஒரு சில வீடியோக்கள் மட்டுமே வைரலாகும். பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து இழுக்கும் வீடியோக்கள் அன்றைய தினத்தின் வைரல் வீடியோவாக மாறிவிடும். ஆனால் எந்த வீடியோ வைரலாகும் என்றெல்லாம் கணிக்க முடியாது. வைரலாக வேண்டும் என்று ஒரு சிலர் பதிவிடும் வீடியோக்களை நெட்டிசன்கள் கண்டு கொள்ளக்கூட மாட்டார்கள். செயற்கை தனம் இல்லாத இயல்பான காணொளிகள் பொதுவாக நெட்டிசன்களை ஈர்க்கும்.
மேலும் படிக்க | ‘ப்ப்ப்பா....பாம்பு’: இணையத்தை பற்ற வைக்கும் பாம்புகளின் காதல், வீடியோ வைரல்
அந்தவகையில், நெட்டிசன்களை வெகுவாக ஈர்த்த உத்தரப்பிரதேச காவலர்கள் இருவரின் வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது. சுதந்ததிர தினத்தையொட்டி உத்தரப்பிரதேசத்தில் கொடியேற்றும் நிகழ்வின்போது இரண்டு காவலர்கள் திடீரென பாம்பு நடனம், அதாவது நாகினி நடனம் ஆடியுள்ளனர். இதனை அங்கிருந்த சக காவலர்கள் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பதிவிட, அந்த வீடியோ வைரலாகியிருக்கிறது. முதலில் சப் இன்ஸ்பெக்டர் நடனமாடத் தொடங்க, அவருக்கு பக்கபலமாக கான்ஸ்டபிளும் நடனமாடுகிறார்.
जब दारोगा जी बने सपेरा, नागिन कांस्टेबल को अपनी बीन पर नचाया pic.twitter.com/eVHCx3hJgo
— Jaiky Yadav (@JaikyYadav16) August 16, 2022
அண்மையில் நாடு முழுவதும் 76வது சுதந்திர தின விழா வெகுவிமரிசையாக நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. உத்தரப்பிரதேசத்திலும் மூலை முடுக்கெல்லாம் கொண்டப்பட்ட நிலையில், காவல்நிலையம் ஒன்றில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டுள்ளது. பிலிப்பட் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வின்போது, அப்பகுதியைச் சேர்ந்த சப் இன்ஸ்பெக்டர் ஜிபீன் நடனமாடுகிறார். அவர் உற்சாக மிகுதியில் நடனமாடுவதைப் பார்த்த கான்ஸ்டபிலும் களத்தில் இறங்க சுதந்திர தின விழா கொண்டாட்டம் களைகட்டுகிறது. சமூகவலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகவும் பகிரப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | Viral News: தன்னை கடித்த பாம்பை கடித்து குதறிய 2 வயது சிறுமி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ