Viral Video: இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியலை... கிரேனில் ஸ்கூட்டருடன் தொங்கும் நபர்!

நாக்பூரில் ஒரு நபர் தனது ஸ்கூட்டரை கிரேனில் எடுத்து செல்லும் போது. ஸ்கூட்டரை பிரிய மனம் இல்லாமல், தொங்கும் ஸ்கூட்டரில் அமர்ந்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 18, 2022, 05:32 PM IST
  • இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்படுகின்றன.
  • சமூக ஊடகத்தில் பகிரப்படும் வீடியோக்கள் சில சமயம் நம்மை மனதை பெரிதும் கவர்கின்றன.
  • நாக்பூரில் நடந்த ஒரு வினோத சம்பவத்தின் வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.
Viral Video: இதெல்லாம் ரொம்ப ஓவரா தெரியலை... கிரேனில் ஸ்கூட்டருடன் தொங்கும்  நபர்! title=

சமூக ஊடகத்தில் பகிரப்படும் வீடியோக்கள் சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. இணையத்தில் தினமும் எண்ணிலடங்கா விடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் தான் ரசிகர்களின் பேராதரவைப் பெறுகின்றன.  அந்த வகையில் மகாராஷ்டிராவின் நாக்பூரில் ஒரு நபர் தனது ஸ்கூட்டரை கிரேனில் எடுத்து செல்லும் போது. ஸ்கூட்டரை பிரிய மனம் இல்லாமல், தொங்கும் ஸ்கூட்டரில் அமர்ந்திருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் எடுக்கபட்ட ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. ஒரு நபர் தனது ஸ்கூட்டரை கிரேனில் எடுத்து செல்லும் போது தொங்கும் ஸ்கூட்டரில் அமர்ந்திருப்பதை வீடியோவின் காணலாம். இன்ஸ்டாகிராமில் Humnagpurkar என்ற பெயரில் ஒரு பக்கத்தால் பகிரப்பட்ட வீடியோவில், இரு சக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த நபர், இழுத்துச் செல்லப்படும் வாகனத்தின் டிரைவரிடம் தன்னையும் தனது ஸ்கூட்டரையும் மீண்டும் தரையில் இறக்க சொல்வதை வீடியோவில் காணலாம்.

மேலும் படிக்க | Viral Video: இது என்னடா சோதனை... தண்ணீர் குடிக்க போராடும் குட்டி யானை

இந்த வீடியோ ஜூலை 19 அன்று பகிரப்பட்டது. ஆனால் தற்போது வைரலாகி வருகிறது.  வாகனத்தை அழுத்து செல்லும் டிரக்கில் வாகனத்தை ஏற்றும் போது வாகனத்தை ஒப்படைக்க மறுத்தார் அந்த நபர். அவரது ஸ்கூட்டரின் மீதுள்ள  ஈடுபாட்டைக் கண்டு பல பயனர்கள் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் வெளியிட்டனர். இழுவை வண்டியில் மேலும் சில இரு சக்கர வாகனங்கள் இருப்பதையும் காணலாம்.

வைரலான வீடியோவை இங்கே காணலாம்:

 

 

நாக்பூரில் உள்ள சதர் பஜார் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றில் மிதக்கும் ஸ்கூட்டரில் அமர்ந்திருக்கும் போது மனிதன் தான் என்னமோ சாலையில் இருப்பதை போல், பதற்றம் ஏதும் இல்லாமல் இருக்கிறார். அவர் தான் தொங்கிக் கொண்டிருப்பதை நினைத்து . அதிர்ச்சியடைந்த வழிப்போக்கர்கள் அவர் இழுவை வண்டியின் பொறுப்பாளர்களுடன் பேசுவதைக் கண்டார்.

பகிரப்பட்டதிலிருந்து, இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் 2.8 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் 83,000 க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் குவித்துள்ளது. பல பயனர்கள் தனது ஸ்கூட்டரை விட்டு பிரியாதததற்காக அந்த நபரை கேலி செய்துள்ளனர். இவர் வாகனத்தை தனது மனைவி போல் நேசிப்பதாக... இல்லை இல்லை மனைவியை விடவும் அதிகம் நேசிப்பதாக தெரிகிறது. 

மேலும் படிக்க | Viral Video: தாய் - மகள் ஜோடியின் அற்புத நடனம்; பாராட்டித் தள்ளும் நெட்டிசன்கள்

மேலும் படிக்க | Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News