வைரல் வீடியோ: மனித வாழ்க்கை பல வித இறுக்கங்களையும் பிரச்சனைகளையும் கொண்டது. தினம் தினம் பல வித இன்னல்களையும் சவால்களையும் சந்திக்கும் நாம் இவற்றிலிருந்து சிறிதளவு நிவாரணம் கிடைத்தாலும் நிம்மதி அடைகிறோம். சில விஷயங்கள் அவ்வப்போது நம்மை திசை திருப்பி நமக்கு ஒரு மாறுதலை அளிக்கின்றன. அத்தகைய விஷயங்களில் சமூக ஊடகங்களுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் விலங்குகளின் வீடியோக்களுக்கு அதிக மவுசு உள்ளது. அதுவும் குரங்கு, பாம்பு, நாய், பூனை, சிங்கம், புலி ஆகிய விலங்குகள் இணையத்தின் ஹீரோக்கள் என்றே கூறலாம். 


நாய்கள் மிகவும் விரும்பப்படும் செல்லப்பிராணிகள். நாய்கள் மனிதனின் சிறந்த நண்பர்களாக பார்க்கப்படுகின்றன. வீட்டில் நாய் உள்ளவர்கள் அவற்றையும் வீட்டின் உறுப்பினர்களாகவே பார்க்கிறார்கள். நாய்களும் வீட்டில் உள்ள நபர்களுடன் அளவு கடந்த பாசத்துடன் நடந்துகொள்கின்றன. சமூக ஊடகங்களில் நாய்களின் பல வீடியோக்கள் தினம் தினம் பகிரப்படுகின்றன. இவற்றுக்கு இணையவாசிகளிடம் அதிக வரவேற்பும் கிடைக்கின்றன. 


நாய்களின் விசுவாசமும் தன் முதலாளி மீது அது காட்டும் பாசமும் அனைவரும் அறிந்ததே. சமீபத்தில் இணையத்தில் பகிரப்பட்டுள்ள ஒரு  வீடியோவிலும் இதற்கான சான்று கிடைக்கிறது. நாம் நாய்களை ஏன் நம்ப வேண்டும் என்பதை காட்டும் வீடியோவாக இது உள்ளது. 


மேலும் படிக்க | Viral Video: ஏரிக்கரையில் ரொமான்ஸ் செய்யும் அன்னப்பறவைகள்... குதூகலத்தை தரும் வீடியோ.!


நாய் செய்யும் செயலை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள்


இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரலான இந்த வீடியோவில் முதலில் ஒரு நாயை பார்க்க முடிகின்றது. முதலில் அது ஒரு இடத்தில் நின்றுகொண்டு மும்முரமாக ஏதோ செய்துகொண்டிருப்பது போல தெரிகிறது. ஆனால் பின்னர்தான் விஷயமே புரிகிறது.


வீடியோவில் நாய் தன் முதலாளி தனது காரை பார்க் செய்ய அவருக்கு உதவுவதை பார்க்க முடிகின்றது. பின்னால் வரலாம் என்பதற்கு அது மிக அழகாக கையை அப்படி செய்கை செய்து காட்டுகிறது. பின்னர், சரியான இடத்திற்கு கார் வந்தவுடன், காரை நிறுத்த அது குரைத்து காட்டுகிறது. நாய் சொல்வதை அப்படியே கார் ஓட்டுநர் கேட்கிறார். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால். அவர் சரியான இடத்தில் காரை பார்க் செய்ய நாய் அட்டகாசமாக உதவுகிறது. இதை வீடியோவில் தெளிவாக காண முடிகின்றது.


நாயின் அசத்தல் திறனை இந்த வீடியோவில் காணலாம்:



வீடியோ இணையத்தில் வைரல் ஆனது


இந்த வீடியோ சமூக ஊடக தளமான ட்விட்டரில் @Enezator என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 


ஒரு பயனர் ‘என் நாய்க்கும் இப்படி பயிற்சி கொடுங்கள்.. எனக்கு பார்க்கிங்கில் பிரச்சனை இல்லாமல் இருக்கும்’ என எழுதியுள்ளார். ‘நாய் போல மனிதனுக்கு ஒரு நல்ல நண்பன் இருக்க முடியாது’ என மற்றொரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். ‘இந்த நாய் போல் ஒரு செல்லப்பிராணி கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்’ என மற்றொரு பயனர் எழுதியுள்ளார். ஒரு பயனர், ‘மிக அழகான வீடியோ.... இதை பார்த்து மனம் மகிழ்ச்ந்தது’ என எழுதியுள்ளார்.


(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)


மேலும் படிக்க | ‘தேங்க்ஸ் ப்ரோ’: நன்றி சொல்லும் குரங்குகள்... பாராட்டும் நெட்டிசன்ஸ்: நெஞ்சை அள்ளும் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ