நமது வீடுகளில் வளர்க்கக்கூடிய வளர்ப்பு பிராணிகள் நம் மீது எவ்வளவு பாசமாக இருக்கும் என்பது நமக்கு நன்றாகவே இருக்கும், அந்த விலங்குகளின் பாசத்தை குறிப்பிட குட்டிபோட்ட நாய் போல சுற்றாதே என்கிற உவமையும் கூறுவார்கள்.  மற்ற வளர்ப்பு பிராணிகளை காட்டிலும் நாய் இனங்கள் மனிதர்கள் மீது மிகவும் பாசமாகவும் இருக்கும், அவை சில சமயங்களில் நமக்கு சிறந்த நண்பனாகவும் இருக்கும்.  சில சமயங்களில் நாய், பூனை போன்ற வளர்ப்பு பிராணிகள் நமக்கு குழந்தையை போலவும், சில சமயம் நமது பாதுகாவலராகவும், சில சமயம் நமது நண்பர்கள் போலவும், சில சமயம் நமக்கு சிறந்த துணை போலவும் இருக்கும்.  மனிதர்கள் கூட சில சமயங்களில் நன்றியை மறந்துவிடுவார்கள் ஆனால் நன்றியுள்ள பிராணி என கூறப்படும் நாய் இனங்களோ ஒருபோதும் நாம் செய்த நன்றியை மறந்துவிடுவதில்லை.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | நோயாளியாக வந்த பேய், அடுத்து என்னாச்சி: வீடியோ வைரல்


நாய்கள் நன்றியை மறப்பதில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், நாய்கள் நம் மீது மிகுந்த பாசத்துடன் இருக்கும் என்பதிலும் சிறிதும் சந்தேகத்திற்கு இடமில்லை.  இதனை உணர்த்தும் விதமாக இணையத்தில் ஒரு வீடியோ பரவி பலரின் கவனங்களையும் ஈர்த்துள்ளது, இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் கருப்பு நிறத்தில் மேலாடையும், சிவப்பு நிறத்தில் கீழாடையும் அணிந்துகொண்டு ஒரு சிறுவன் தரையில் படுத்திருக்கிறான், அவனை சுற்றியும் அவன் மேலேயும் கொழுகொழுவென்று கிட்டத்தட்ட நான்கு நாய்குட்டிகளும், ஒரு பெரிய நாயும் நிற்கின்றது.  அவை என்ன செய்கின்றது என்று பார்த்தால் அந்த சிறுவனை தங்களது பாசமழையில் நனைய செய்துகொண்டு இருக்கின்றது.


 



அந்த சிறுவனோ நாய்களின் கொஞ்சலில் திக்குமுக்காடி திணறிக்கொண்டு இருக்கின்றான், அப்போதும் அந்த நாய்கள் அவனை விடுவதாய் இல்லை.  பலரின் கவனத்தை ஈர்த்த இந்த வீடியோ ட்விட்டரில் Animalesybichos என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது, இந்த வீடியோ இருபதாயிரத்திற்கு மேற்பட்ட பார்வைகளையும், கமென்டுகளையும், லைக்குகளையும் பெற்று வைரலாகி வருகிறது.


மேலும் படிக்க | 'ப்ப்பா... என்ன ஒரு பொறுப்பு': யானை செய்த செயலால் வாய் பிளந்த நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ