டால்பின் காதலர் மால்கம் ப்ரென்னின் அனுபவம் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். டால்பினுடன் தனக்கு காதம் இருந்ததாகவும் உறவு வைத்துள்ளதாக ஒருவர் கூறியுள்ளதோடு, அந்த  நபர் டால்பினைக் காதலித்த அனுபவத்தையும் புத்தகமாக எழுதியுள்ளார். புளோரிடாவைச் சேர்ந்த 63 வயதான மால்கம் ப்ரென்னர், புளோரிடா நீர் பூங்காவில் பணிபுரியும் போது ஒரு டால்பின் தன்னை மயக்கியதாகவும், பின்னர் ஒரு பெண் டால்பினுடன் உடல் ரீதியாக தொடர்பில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விலங்குகளை நேசிப்பது மனித இயல்பு. ஆனால் சமீபத்தில் ஒருவர் டால்பினை காதலித்தது அதனுடன் ஆறு மாதம் குடும்பம் நடத்தியுள்ளார் என்ற செய்தி ஆச்சர்யமாக உள்ளது இல்லையா..!


ALSO READ | செயற்கைக்கோளை அழித்த ரஷ்யா; விண்வெளியில் அதிகரிக்கும் குப்பை; கலக்கத்தில் NASA..!!


1970 களில் சரசோட்டாவில் உள்ள ஒரு தீம் பார்க்கில் பணிபுரிந்தபோது, ​​குறும்புத்தனமான டால்பினுடன் தனக்கு தொடர்பு இருந்ததாகவும், இந்த 'விவகாரம்' சுமார் 6 மாதங்கள் நீடித்ததாகவும் மால்கம் கூறினார்.


அப்போது, ​​கல்லூரி மாணவர் மால்கம் ப்ரென்னருக்கு டால்பின்களைப் படம் எடுக்கும் பணி ஒதுக்கப்பட்டதால், டோலியின் குளத்துக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டார். இந்த டால்பின் நீச்சலடிக்கும் போது தன்னிடம் வரும் என்று மால்கம் தி மிரரிடம் கூறினார். ஆரம்பத்தில் நான் டால்பின் மீது அதிக கவனம் செலுத்தவில்லை, ஆனால் பின்னர் நான் அதனை காதலித்தேன், அவருக்கு டோலி என்று பெயரிட்டேன் என்று மால்கம் கூறினார்.


ALSO READ | பகீர் தகவல்! 5000 பெண்களுடன் தொடர்பு வைத்துள்ள அமெரிக்க கோடீஸ்வரர்..!!


தற்கொலை செய்து கொண்ட டால்பின் 


ப்ரென்னர் இது குறித்து கூறுகையில், டால்பினுடன் தான் நடத்திய காதல் வாழ்க்கை பற்றி பேச நிறைய இருக்கிறது. அதோடு டால்பின் வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டபோது, ​​ஒன்பது மாதங்களுக்குப் பிறகு பிரிவை தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாகவும் ப்ரென்னர் கூறியுள்ளார். டால்பின் டோலியின் மரணத்திற்குப் பிறகு, ப்ரென்னரும் ஐந்து வருடங்கள் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், விலங்குகள் மீதான் காதல் குறித்து மேலும் கூறிய ப்ரென்னர் ஒரு இளைஞனாக தனது வளர்ப்பு நாயுடன் உறவு கொள்ள முயற்சித்ததாகவும் கூறியுள்ளார்.


ALSO READ | ‘எல்லாமே அலர்ஜி என்றால் எப்படித் தான் வாழ்வது’; இளம் பெண்ணின் பரிதாப வாழ்க்கை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR