பகீர் தகவல்! 5000 பெண்களுடன் தொடர்பு வைத்துள்ள அமெரிக்க கோடீஸ்வரர்..!!

 ஒரு ஆணுக்கு ஒன்று, இரண்டு அல்லது பத்துக்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்பு இருப்பதாக நீங்கள் இன்றுவரை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஒரு ஆண் 5,000 ஆயிரம் பெண்களுடன் உறவு வைத்திருந்ததை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 23, 2021, 07:57 AM IST
பகீர் தகவல்! 5000 பெண்களுடன் தொடர்பு வைத்துள்ள அமெரிக்க கோடீஸ்வரர்..!!

வாஷிங்டன்: ஒரு ஆணுக்கு ஒன்று, இரண்டு அல்லது பத்துக்கும் மேற்பட்ட பெண்களுடன் தொடர்பு இருப்பதாக நீங்கள் இன்றுவரை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஒரு ஆண் 5,000 ஆயிரம் பெண்களுடன் உறவு வைத்திருந்ததை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதைப் படித்த பிறகும் நீங்கள் நம்பமாட்டீர்கள். உண்மையில், அமெரிக்காவில் கோடீஸ்வரர் ஒருவர் 5,000 பெண்களுடன் கள்ள உறவு வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

ஒன்றல்ல, இரண்டல்ல 5000 பெண்கள்

குற்றம் சாட்டப்பட்டவர் 5,000 பெண்களின் விபரங்களை கணினியில் பதிவு செய்து வைத்திருந்தார் என டெய்லி மெயிலில் வெளியிடப்பட்ட அறிக்கை கூறுகிறது. ஒன்றுக்கு அதிகமானது என்பதால், கள்ள உறவு வைத்திருக்கும் விபரங்களை குறிப்பாக பதிவு செய்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட பெண்கள் வாயை மூடிக் கொண்டிருக்க  கணிசமான தொகையையும் கொடுத்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. ஆனால் 2016 ஆம் ஆண்டில், கற்பழிப்பு குற்றச்சாட்டு காரணமாக அவர் தனது உயர் பதவியை இழக்க நேரிட்டது.

ALSO READ | முத்தத்தால் இவ்வளவு நன்மையா! தினமும் முத்தமிடுங்கள்!

கோடீஸ்வரர் பெண்களுக்காக கட்டிய அந்தப்புரம்

குற்றம் சாட்டப்பட்ட நபரின் பெயர் மைக்கேல் கோகுன் (Michael Goguen). அவரது வயது 57. Michael Goguen முன்பு Sequoia Capital நிறுவனத்தின் பங்குதாரராக இருந்தார், இன்று அவர் சொந்தமாக ஒரு நிறுவனத்தை வைத்திருக்கிறார். மைக்கேல் கோகுன் பல கோடி ரூபாய்க்கு சொந்தக்காரர். மைக்கேல் கோகுயனின் நான்கு முன்னாள் ஊழியர்கள், கள்ள காதலிகளுக்கான அரண்மனை போன்ற பங்களாவை அதாவது அந்தபுரத்தை நிர்வகிக்க தங்கள் முதலாளிக்கு உதவுவதாகக் கூறினர்.

ALSO READ | கலிபோர்னியா சாலையில் திடீரென பெய்த ‘டாலர்’ மழை!

பூம்-பூம் அறை

மைக்கேல் கோகுன் தனது மாளைகையின் அடித்தளத்தில் உள்ள தனது பாதுகாப்பான வீட்டில் அல்லது பூம்-பூம் அறையில் பெண்களுடன் நேரம் கழிப்பார் என கூறப்படுகிறது.

கடந்த 2016ஆம் ஆண்டு மைக்கேல் கோகுயின் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக  நடனக் கலைஞர் ஒருவர் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மைக்கேல் கோகுன் தன்னை பல மணிநேரம் பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண் குற்றம் சாட்டினார்.

ALSO READ |  குடிபோதையில் ஆண் காவலருக்கு முத்தம் அளித்த வாலிபர் கைது!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News