வழக்கமாக, யார் என்றே தெரியாத ஹோட்டல் சர்வர், பொட்டிக்கடைக்காரர் தொடங்கி வழிப்போக்கர்கள் வரை, அவர்களை எப்படி அழைப்பது என்பது பலருக்கும் பல நேரங்களில் குழப்பத்தை உண்டாக்கும். தோற்றத்தில் நம்மை விட சிறிது இளமையாக இருக்கும் ஆண்களை தம்பி, மூத்தவர்போல் இருப்பவரை அண்ணா, இன்னும் மூத்தவராக இருந்தால் ஐயா என்று அழைப்போம். சிறுவர்கள் பலரையும் மாமா என்று அழைப்பார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நமக்கும் அவர்களுக்கும் நீடிக்கபோகும் உறவு என்பதோ சில நிமிடங்களாகவோ அல்லது சில மணிநேரங்களாகவோதான் இருக்கும். இருப்பினும், அவர்களுடன் நல்ல உறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் பலரின் எண்ணமாக இருக்கும்.  அதன் வெளிப்பாடே அவர்களை உறவுச்சொல்லி அழைப்பதாகும். 


மேலும் படிக்க | Video: ஆடையின்றி வந்த பிரபல மாடல்... மிரண்ட பார்வையாளர்கள் - இனி இப்படிதான்!


அந்த வகையில், வட இந்தியாவில் ஊபர் ஓட்டுநர் ஒருவர், தன்னை அழைக்க வேண்டாம் என தனது காரில் ஸ்டிக்கர் ஒட்டி வைத்திருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் உள்ள இருக்கையின் பின்புறம் அந்த ஸ்டிக்கரை அந்த ஓட்டுநர் ஒட்டியுள்ளார்.


அதில்,"என்னை அண்ணன் என்றோ மாமா என்றோ அழைக்க வேண்டாம் (dont call me bhaiya or uncle)" என வேண்டுகோள் விடுத்துள்ளார். வேடிக்கையான இந்த ஸ்டிக்கர் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது. இதை, பத்திரிகையாளரான சோஹினி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் முதலில் பகிர்ந்திருந்தார். அந்த பதிவில் ஊபர் நிறுவனத்தையும் டேக் செய்திருந்தார். 



இந்நிலையில், அந்த பதிவைக் கண்ட ஊபர் இந்தியா,"உங்களுக்கு சந்தேகம் வந்தால், அவரின் பெயரை எங்களின் ஆஃபில் பார்க்கவும்" என நகைச்சுவையாக பதிலளித்துள்ளது. இந்த பதிவிற்கு ஆயிரக்கணக்காணோர் பதிலளித்து வருகின்றனர். அதில் குறிப்பாக, இனிமேல் அவர்களை 'Sir' என்று அழைப்பதும் நன்றாகத்தான் இருக்கும் என பலரும் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | நச்சுனு கிஸ் பண்ண மச்சினிச்சி: ஷாக் ஆன மணமகன், கடுப்பான மணமகள், வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ