Video: ஆடையின்றி வந்த பிரபல மாடல்... மிரண்ட பார்வையாளர்கள் - இனி இப்படிதான்!

அமெரிக்காவின் பிரபல மாடல் பெல்லா ஹடிட் வித்தியாசமான முறையில் ரேம்ப்  வாக் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.   

Written by - Sudharsan G | Last Updated : Oct 2, 2022, 02:59 PM IST
  • பெல்லா ஹடிட் மேடைக்கு வரும்போது, கீழ் உள்ளாடையும், காலணியையும் மட்டுமே அணிந்திருந்தார்.
  • வீடியோவின் முடிவில் அவர் வெண்நிற ஆடையுடன் ரேம்ப் வாக் செய்தது பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது.
  • ஆனால், இது மேஜிக் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Video: ஆடையின்றி வந்த பிரபல மாடல்... மிரண்ட பார்வையாளர்கள் - இனி இப்படிதான்! title=

உலகம் முழுவதும் பல்வேறு வகையிலான ஃபேஷன் ஷோக்கள் மிகவும் பிரபலமானவை. ஆடை வடிவமைப்பாளர்கள் தங்களின் தயாரிப்புகள் இந்த ஃபேஷன் போட்டியிடுவார்கள். இந்த நிகழ்ச்சிகளில், புது புது வடிவமைப்பிலான ஆடைகளை அணிந்து வரும் மாடல்களின் ரேம்ப் வாக், கேட் வாக் வீடியோக்கள் தற்போது இணையத்தில் அதிக கவனத்தை பெற்று வருகின்றன.

அந்த வகையில், கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாரீஸ் ஃபேஷன் வீக் நிகழ்ச்சியில், அமெரிக்காவின் பிரபல மாடலான பெல்லா ஹடிட்-ன் ரேம்ப் வாக் தான் தற்போது இணையத்தையே கலக்கி வருகிறது. வீடியோவின் தொடக்கதில் மேடைக்கு வரும் பெல்லா, காலணி மற்றும் கீழ் உள்ளாடையுடன்தான் இருந்தார். அப்போது, மார்பகங்களை தனது கையால் மறைத்து நடந்த அவர், வீடியோவின் கடைசியில் ஆடையுடன் பார்வையாளர்கள் மத்தியில் ரேம்ப் வாக் செய்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

மேலும் படிக்க | நச்சுனு கிஸ் பண்ண மச்சினிச்சி: ஷாக் ஆன மணமகன், கடுப்பான மணமகள், வைரல் வீடியோ

இது மேஜிக் ஒன்றும் இல்லை. கோப்பர்னி என்ற ஆடை வடிவமைப்பு நிறுவனத்தின் சமீபத்திய நவீன ஆடைதான் அது. முன்னர் கூறியதுபோல், ஆடையின்றி மேடைக்கு  வந்த பெல்லாவின் உடல் மீது இரண்டு ஆடை வடிவமைப்பாளர்கள் ஸ்ப்ரே ஒன்றை அடிக்கத் தொடங்கினர். உடல் முழவதும் ஒரு ஆடையை போன்று, அந்த ஸ்பிரேயில் உள்ள திரவத்தில் அவர்கள் வரைந்தனர். முழுமையாக ஸ்பிரே செய்து பின்னர், சற்று நேரம் கழித்து அந்த திரவமானது நன்றாக உலர்ந்து, ஒரு தடிமனா ஆடையாக உருமாறியது.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by coperni (@coperni)

பின்னர், அந்த தடிமனான உடையை அங்கிருந்த மற்றொரு வடிவமைப்பாளர், அதற்கு தேவைப்படும் வடிவமைப்புகளை கொடுக்க, அது பெல்லாவுக்கு ஒரு கச்சிதமான ஆடையாக மாறியது. அந்த வெண்நிற ஆடையுடன் பெல்லா ஹடிட் கம்பிரமபாக ரேம்ப் வாக் செய்தது பார்வையாளர்களை பரவசத்தப்படுத்தியது.  முதலில் அவர் ஆடையின்றி வந்ததில் இருந்து கடைசிவரை, அங்கிருந்த புகைப்பட கலைஞர்கள் முதல், பார்வையாளர்கள் வரை அனைவரும் ஆர்வமுடன் படம் பிடித்து வந்த நிலையில், அந்த வீடியோக்கள் தான் தற்போது இணையத்தில் ஹிட் அடித்துள்ளன. 

இந்த ஆடையின் சிறப்பம்சமே, சில நிமிடங்களிலேயே தங்களுக்கு வேண்டிய ஆடைகளை ஒருவர் எங்கு வேண்டுமானாலும் எளிதாக உருவாக்கிக்கொள்ள முடியும் என்பதுதான். மேலும், ஃபேஷன் உலகில் இந்த வடிவமைப்பு பெரும் புரட்சியை ஏற்படுத்தவல்லது என பெரும்பாலோனார்  கருத்து தெரிவித்துள்ளனர். தொலைநோக்கு பார்வையுடன் தயாரிக்கப்பட்ட இந்த ஆடைக்கு பல்வேறு தரப்பில் இருந்து வரவேற்பு கிடைத்துள்ளது. 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by coperni (@coperni)

மேலும் படிக்க | திருமண பூரிப்பில் மகிழ்ச்சியில் ஒயிலாக நடனமாடும் அழகிய மணப்பெண்

 சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News