Eat Dosa Win Prize: உங்களுக்கு தோசை சாப்பிட பிடிக்குமா? யாருக்குத்தான் பிடிக்காது என்கிறீர்களா? அதுவும் சரிதான்!! தோசையை பிடிக்காதவர்கள் கூட இருப்பார்களா என்ன? தொசையை பிடித்த அனைவருக்குமானது இந்த செய்தி. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு இடத்திற்கு சென்று நீங்கள் தோசை சாப்பிட்டால், தோசை சாப்பிட்ட கையோடு ரூ.71000-ஐ பெற்றுச்செல்லலாம்.  வினோதமாகத் தோன்றினாலும், இது உண்மையான செய்தி!! ஆனால், நீங்கள் அந்த தோசையை 40 நிமிடங்களில் சாப்பிட்டு முடிக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு சலுகை அளிக்கும் இடம் எங்குள்ளது என்று உங்களுக்குத் தோன்றும். நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள ஒரு உணவகத்தில் இப்படிப்பட்ட ஒரு சலுகை கிடைக்கிறது. 


டெல்லி உத்தம் நகரில் இந்த உணவகம் உள்ளது


செய்தி நிறுவனமான ANI இன் அறிக்கையின்படி, டெல்லி (Delhi) உத்தம் நகரில் 'சுவாமி சக்தி சாகர் உணவகம்' என்ற பெயரில் ஒரு உணவகம் உள்ளது. 'தோசா சேலஞ்ச்' , அதாவது தோசை சவாலை வெற்றிகரமாக செய்து முடித்தால், 71,000 ரூபாய்க்கான காசோலையை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பு இங்கு கிடைக்கிறது. ஆனால், இதில் ஒரு ட்விஸ்ட் உள்ளது. இது ஒரு சாதாரண தோசை அல்ல. இந்த தோசையின் நீளம் 10 அடி!!



இந்த தோசை மக்களுக்கு ஒரு பெரிய சவாலாகவே மாறிவிட்டது. தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள இந்த உணவகம் தனது வாடிக்கையாளர்களுக்கு இந்த தனித்துவமான சவாலை வழங்கியுள்ளது. இங்கு வரும் தோசை பிரியர்கள் 10 அடி நீள தோசையை வெறும் 40 நிமிடங்களில் சாப்பிட்டு முடித்தால் மட்டுமே ரூ.71,000 வெல்லும் வாய்ப்பு கிடைக்கும். 


ALSO READ | Viral Video: ‘சிங்கத்தை சீண்டினால் என்ன ஆகும்’; சிங்கம் பாடம் புகட்டும் வைரல் வீடியோ!


10 அடி ராட்சத தோசை
இதுகுறித்து உணவக உரிமையாளர் சேகர் குமார் கூறுகையில், 'எங்களது உணவகத்தில் 10 அடி நீள 'தோசை சேலஞ்ச்' நடந்து வருகிறது. தோசையை 40 நிமிடத்தில் சாப்பிட்டு முடிப்பவருக்கு காசோலையாக ரூ.71,000 பரிசுத் தொகையை வழங்குவோம்.' என்றார். 


முன்பு இந்த போட்டிக்கு சிறிய தோசைகளை செய்து வந்ததாகவும், ஆனால் தற்போது அதை தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய சவாலாக மாற்றியுள்ளதாகவும் உணவக உரிமையாளர் தெரிவித்தார். முன்பெல்லாம் இவர் 5 அடி, 6 அடி, 8 அடி தோசைகளைச் செய்து வந்தார். ஆனால் இப்போது 10 அடி பெரிய தோசை செய்கிறார்.


இதுவரை 25 முதல் 26 பேர் இந்த சவாலை ஏற்றுக்கொண்டுள்ளதாக உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இருப்பினும், இன்றுவரை இந்த சவாலை யாராலும் வெல்ல முடியவில்லை. இந்த சவாலில் பங்கேற்க பல இடங்களில் இருந்து பலர் வருவதாக  உரிமையாளர் கூறுகிறார். இந்த தோசையின் விலை 1500 ரூபாய். 


சவாலில் பங்கேற்ற வாடிக்கையாளர் ஒருவர், தான் சவாலை ஏற்றுக்கொண்டதாகவும், ஆனால் தோசையை (Dosa) சாப்பிட்டு முடிக்க முடியாமல் சவாலில் தோற்று போனதாகவும் தெரிவித்தார். எனினும், தோசை மிகவும் சுவையாக இருந்ததாக அந்த வாடிக்கையாளர் கூறினார்.


உங்களால் முடியுமா? டெல்லி சென்று தோசையை சாப்ப்பிட்டுத்தான் பாருங்களேன்!!


ALSO READ | 'நான் ஓல்டு மேன் இல்லடா.... போல்டு மேன்' பைக்கில் மாஸ் காட்டும் தூள் தாத்தா!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR