'நான் ஓல்டு மேன் இல்லடா.... போல்டு மேன்' பைக்கில் மாஸ் காட்டும் தூள் தாத்தா!!

வீடியோவைப் பார்த்தால் இந்த முதியவருக்கு வயது ஒரு விஷயமே இல்லை என்று தோன்றுகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 2, 2022, 04:33 PM IST
  • தற்போது ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
  • வைரலாகியுள்ள இந்த வீடியோ ஒரு முதியவருடையது.
  • வீடியோவைப் பார்த்தால் இந்த முதியவருக்கு வயது ஒரு விஷயமே இல்லை என்று தோன்றுகிறது.
'நான் ஓல்டு மேன் இல்லடா.... போல்டு மேன்' பைக்கில் மாஸ் காட்டும் தூள் தாத்தா!! title=

Viral Video: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் (Social Media) பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

சமூக ஊடகங்களில் நாம் பல பைக் ஸ்டண்ட் வீடியோக்களை பார்த்துள்ளோம். பெரும்பாலான வீடியோக்களில் இளைஞர்களே இருப்பார்கள். இதில் அவர்கள் பைக்கில் ஸ்டண்ட் செய்து நடனமாடுவதைக் கண்டுள்ளோம். ஸ்டண்ட் செய்யும் போது பல இளைஞர்கள் விபத்துக்களில் சிக்கி பலியாவதையும் பார்த்திருக்கிறோம். 

ஆனால் இந்த பதிவில் நாம் காணப்போகும் வீடியோவைப் பார்த்தால், உங்களால் உங்கள் கண்களையே நம்ப முடியாது. 

பைக்கில் ஸ்டண்ட் செய்யும் முதியவர்

வைரலாகியுள்ள இந்த வீடியோ (Viral Video) ஒரு முதியவருடையது. இந்த வீடியோவைப் பார்த்த பிறகு, இவரைப் போல இளைஞர்களால் கூட ஸ்டண்ட் செய்ய முடியாது என்றுதான் தோன்றும். இதில், முதியவர் ஒருவர் ஓடும் பைக்கில் மிகவும் பயங்கரமான ஸ்டண்ட்களை செய்வது தெரிகிறது. முதியவரின் இந்த ஸ்டண்டுகளைப் பார்த்து இணையவாசிகளும் சாதாரண மக்களும் ஆச்சரியமடைந்துள்ளனர்.

ALSO READ | 8 மனைவிகளுடன் ஒரே வீட்டில் அசால்டாய், அட்டகாசமாய் வாழும் தாய்லாந்து ரோமியோ

வீடியோவைப் பார்த்தால் இந்த முதியவருக்கு வயது ஒரு விஷயமே இல்லை என்று தோன்றுகிறது. இளைஞர்களை விட இவரிடம் ஆற்றலும், துடிதுடிப்பும் அதிகமாக உள்ளது. முதியவர் பைக்கில் எங்கோ செல்வதை வீடியோவில் காண முடிகிறது. அப்படி செல்லும்போது, அவர் ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்டண்ட்களை செய்கிறார். பைக்கின் ஹேண்டிலிலிருந்து இரு கைகளையும் விட்டு விட்டு அசால்டாய் பைக் ஓட்டும் அவரைப் பார்த்தால் ஒரு புறம் ஆச்சரியமாக இருந்தாலும், ஒரு முறை அவருக்கு எதுவும் ஆகிவிடுமோ என்ற அச்சமும் உள்ளது. பைக்கில் அவர் ஆடும் டான்ஸைப் பார்த்தால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. 

ஓல்ட் மேனின் அந்த போல்ட் வீடியோவை இங்கே காணலாம்: 

வீடியோவை பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள்

பலமுறை அவர் சீட்டில் குதிப்பதையும், சில சமயம் சீட்டின் பின்புறத்திற்கு செல்வதையும் காண முடிகின்றது. இந்த வயதிலும், இரு கைகளையும் விட்டுவிட்டு அவர் பைக் ஓட்டுவது நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. வீடியோவை பார்த்து இணையவாசிகள் (Netizens) பலரும் அந்த முதியவரின் துணிச்சலை பாராட்டி வருகின்றனர். 

எனினும், பலர் இது தேவையா என்றும் வினவி வருகிறார்கள். அந்த முதியவருக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற கவலை அவர்களது கமெண்டுகளில் தெரிகிறது. இந்த வீடியோவுக்கு இதுவரை 9 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் கிடைத்துள்ளன.

ALSO READ | இது ரவுடி பேபி காலம்! டிரெண்டை மாற்றிய மணமகள் ஊர்வலம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News