குதிக்க தெரியாத விலங்கு 'யானை' என்று பலருக்கும் தெரிந்த ஒரு விஷயம், தாவர உண்ணி வகையை சார்ந்த இந்த விலங்கானது மற்ற விலங்குகளை விட உருவ அளவில் பெரிதான தோற்றத்தை கொண்டிருக்கும்.  பெரிய யானைகளை விட குட்டி யானைகள் பலவிதமான குறும்பு செயல்களை செய்கின்றன, இவை உருவத்தில் பெரியதாக தெரிந்தாலும் அவை செய்யும் குறும்புகளில் பார்ப்பதற்கு சிறிய குழந்தைகள் செய்யும் செயல்கள் போல தெரிகிறது.  யானைகள் மேட்டு பகுதியிலிருந்து கீழே குதிக்க தெரியாமல்  உடம்பை நெளித்து வளைத்து அந்த இடத்தை கடக்கும் காட்சி இணையத்தில் பரவி பலரது கவனங்களையும் ஈர்த்து இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | போரை நிறுத்துங்கள் மழலையின் கெஞ்சல்! 


தற்போது அந்த வைரல் வீடியோவானது ட்விட்டரில் வொண்டர் ஆஃப் சயின்ஸ் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.  அந்த வீடியோவில் மரங்கள் மற்றும் மணல் சூழ்ந்த பெரிய நிலைபரப்பில் யானைகள் நிற்பதை காண முடிகிறது.  யானைகள் மேடான பகுதியில் நின்றுகொண்டு இருக்கின்றன, அவற்றால் கீழே இறங்கமுடியவில்லை.  இதுவே வேறு விலங்காகவோ அல்லது மனிதராகவோ இருந்திருந்தால் மேட்டு பகுதியிலிருந்து கீழே குதித்து இருப்பார்கள், ஆனால் யானையால் அவ்வாறு செய்யமுடியவில்லை.  பின்னர் அந்த யானை மெதுவாக தனது உடலை தரையில் படும்படி தேய்த்து வளைத்து நெளித்து ஒருவழியாக கீழே இறங்கிவிடுகிறது.  அதனைத்தொடர்ந்து மற்றொரு யானையும் கீழே இறங்க முயற்சித்து தலைகீழாக கீழே சரிந்து விழுகுகிறது.


 



அந்த வீடியோவில் யானைகளால் குதிக்க முடியாது, ஆனால் இது எப்படி அந்த இடத்தை விட்டு நகர்கிறது என்று பாருங்கள் என்று கூறப்பட்டுள்ளது.  யானையின் முயற்சியையும், நகைச்சுவையான காட்சியையும் இணையவாசிகள் பலரும் ரசித்ததோடு, லைக் செய்து வருகின்றனர்.


மேலும் படிக்க | ஆட்டுக்கும் மயிலுக்கும் ‘சில்லுனு ஒரு சண்டை’, சிரிக்கும் நெட்டிசன்கள்: வைரல் வீடியோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR