ஆட்டுக்கும் மயிலுக்கும் ‘சில்லுனு ஒரு சண்டை’, சிரிக்கும் நெட்டிசன்கள்: வைரல் வீடியோ

Viral Video: இந்த வீடியோவில் ஆட்டுக்கும் மயிலுக்கும் இடையில் வேடிக்கையான சண்டை ஒன்று நடக்கிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 28, 2022, 05:32 PM IST
  • காட்டு விலங்குகளின் வீடியோக்கள் எப்போதும் சமூக ஊடகங்களில் வைரல் ஆகின்றன.
  • விலங்குகளின் வேறுபட்ட பாணிகள் மனிதர்களை மயக்கி விடுகின்றன.
  • ஆடு மற்றும் மயிலின் சண்டை வீடியோ பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.
ஆட்டுக்கும் மயிலுக்கும் ‘சில்லுனு ஒரு சண்டை’, சிரிக்கும் நெட்டிசன்கள்: வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

காட்டு விலங்குகளின் வீடியோக்கள் எப்போதும் சமூக ஊடகங்களில் வைரல் ஆகின்றன. இதன் காரணம் இவற்றுக்கு இருக்கும் வித்தியாசமான ஸ்டைலாகும். சில நேரங்களில் விலங்குகள் மோதிக்கொள்வதையும், சில நேரங்களில் கொஞ்சிக்குலாவுவதையும் நாம் இந்த வீடியோக்களில் காண்கிறோம். 

விலங்குகளின் வேறுபட்ட பாணிகள் மனிதர்களை மயக்கி விடுகின்றன. தற்போது வெளியாகியுள்ள காணொலியிலும், இப்படி ஒரு காட்சி காணப்படுகின்றது. இதில் ஒரு ஆடு மற்றும் ஒரு மயிலைக் காண்கிறோம். 

இந்த வீடியோ-வில் ஆட்டுக்கும் மயிலுக்கும் இடையில் வேடிக்கையான சண்டை ஒன்று நடக்கிறது. மயிலும் ஆடும் மாறி மாறி ஒன்றை ஒன்று தாக்குவது பார்ப்பதற்கு வினோதமாக இருக்கிறது. 

மயிலுக்கும் ஆட்டுக்கும் சண்டை

பொதுவாக சிங்கம், சிறுத்தை, யானை, நாய் போன்ற விலங்குகள் மட்டுமே சண்டையிடும். ஆனால் ஆடு வேறு எந்த மிருகங்களுடனும், பறவைகளுடனும் மோதியதை பெரும்பாலும் நாம் பார்த்திருக்க மாட்டோம். 

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், காட்டில் ஒரு ஆடும் மயிலும் நேருக்கு நேர் சந்திக்கின்றன. பின்னர் இரண்டுக்கும் இடையே சண்டை தொடங்குகிறது. ஆடு தன் கொம்பினால் மயிலைத் தாக்குகிறது. மயிலும் காற்றில் பறந்து வந்து ஆட்டை பாடாய் படுத்துகிறது. 

ஆடு மற்றும் மயிலின் இந்த சண்டை வீடியோ பார்ப்பதற்கு மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. இதை பார்ப்பவர்களால் சிரிக்காமல் இருக்க முடியாது. 

மேலும் படிக்க | புத்திசாலித்தனமாக தண்ணீர் குடிக்கும் பிஸிக்ஸ் தெரிந்த குருவி - Viral Video 

மயில் மற்றும் ஆட்டின் அந்த வேடிக்கையான வீடியோவை இங்கே காணலாம்:

காட்டு விலங்குகளின் வீடியோ வைரல் ஆனது

இந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி திபன்சு கப்ரா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன் தலைப்பில் அவர், “எப்போதும் உங்கள் வலிமையை நம்புங்கள், கடவுள் அனைவருக்கும் துன்பத்தை எதிர்கொள்ளும் திறனை அளித்துள்ளார்” என எழுதியுள்ளார்.

9 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த சமூக வலைதளவாசிகள் பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். 

மேலும் படிக்க | காயமடைந்த பறவைக்கு உணவளிக்கும் சச்சின்! வைரல் வீடியோ! 

இதுபோன்ற பல சுவாரசியமான வைரல் வீடியோக்களை காண இங்கே CLICK செய்யவும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News