Kollywood News: சில சமயங்களில் நாம் வழக்கமாக செய்யும் சில விஷயங்களும், மிகுந்த எதிர்பார்ப்புகள் இல்லாமல் செய்யும் சில வேலைகளும் நாம் எதிர்பார்க்காத அளவுக்கு பெரிய அளவில் வெற்றியை அளிக்கின்றன. இப்படிப்பட்டவை மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று விடுகின்றன. அப்படி சமீப காலத்தில் மக்கள் மனதை மகிழ்வித்த ஒரு பாடல்தான் 'என்ஜாய் எஞ்சாமி' பாடல்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வேறு பாடல்களின் இல்லாத ஏதோ ஒன்றும், ஒரு வித புதுமையும் இந்த பாடலில் இருந்தது என ரசிகர்கள் உறுதியாக நம்புகிறார்கள். நம் மண்ணோடும், இயற்கையோடும் நம்மை மீண்டும் இணைய வைத்த பாடலாக இது அமைந்தது. மொழி, இடம் என பாராமல் அனைத்து தரப்பு ரசிகர்களும் இந்த பாடலை விரும்பி கேட்டார்கள், பார்த்தார்கள். யாரும் எதிர்பாராத வண்ணம் இந்த பாடல் வைரலாக (Viral) பரவியது. 


தனிப்பட்ட முறையில் உருவாக்கப்பட்ட 'என்ஜாய் எஞ்சாமி' பாடலுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் (Santosh Narayanan) இசையமைத்துள்ளார். இப்பாடலை அவரது மகள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் உலக அளவில் அதிரடி ஹிட் ஆனது. அனைத்து வயதினரையும் இது வெகுவாகக் கவர்ந்தது.


ALSO READ: பிரபலங்கள் கொண்டாடும் 'Enjoy Enjaami' பாடல்! பாராட்டு மழை பொழிவு! 


உலக இசை தினம் ஜூன் 21 அன்று கொண்டாடப்பட்டது. ஸ்பாடிஃபை இசைக்காக ‘என்ஜாய் என்சாமி’ பாடலின் ரீமிக்ஸ் ஒன்றை உருவாக்க பிரெஞ்சு கலைஞர் டி.ஜே. ஸ்னேக்குடன் பாடகி தீ இணைந்து பணியாற்றுகிறார்.  


தற்போது இந்த பாடலுக்கு மற்றொரு பெருமை சேர்ந்துள்ளது.


உலக வரலாற்றில் முதல்முறையாக, பாடகி தீ மற்றும் டி.ஜே ஸ்னேக்கின் புகைப்படம் அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் (Times Square) சித்தரிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக, ஒரு தமிழ் தனிப்பட்ட பாடல் இங்கு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


டி.ஜே. ஸ்னேக் ஒரு பிரபலமான பிரெஞ்சு ராப்பர் ஆவார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் என்ஜாய் எஞ்சாமி ரீமிக்ஸ் பதிப்பைப் பகிர்ந்து கொண்டார். மேலும் "வாங்கோ வாங்கோ ஒண்ணாகி" என்ற இப்பாடலின் வரிகளையும் அவர் எழுதி ட்வீட் செய்துள்ளார்.



ALSO READ: MasterChef படபிடிப்பு தளத்தில் இருந்து படங்களை ஷேர் செய்த தமன்னா 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR