பிரபலங்கள் கொண்டாடும் 'Enjoy Enjaami' பாடல்! பாராட்டு மழை பொழிவு!

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு பாடியுள்ள பாடல் ’enjoy enjaami’.

தமிழகம் தாண்டி வைரல் ஹிட் அடித்த பல பாடல்களை பாடியவர் பாடகி தீ. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் மகளான இவர், வடச்சென்னை, நேர்கொண்ட பார்வை, பிகில் என மேலும் பல்வேறு படங்களில் பாடியுள்ளார்.

இவரும் பாடகர் ‘தெருக்குரல்’ அறிவும் இணைந்து ’enjoy enjaami’ இண்டிபெண்டண்ட் பாடல் பாடலை பாடியிருகிறார்கள். இந்த பாடல் யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளதோடு பாடலைக் கேட்ட பிரபலங்கள் கொண்டாடித் தீர்த்து வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இதோ,

1 /7

 ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலில் நினைவில் நிற்கும் இசை மட்டுமல்லாது, இசைக்கு ஏற்றவாறு வீடியோவும் உள்ளது. கடந்த சில நாட்களாக இந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனால் தற்போதும் கூட பாடலில் இருந்து புது விதமான ஒலிகளை உணர்கிறேன். ஹேட்ஸ் ஆப் சார், பாடகி தீயின் குரலும் ஸ்டைலும் மிக நன்றாக இருக்கிறது. தெருக்குரல் அறிவு ஒரு ராக் ஸ்டார்”  என்று கூறியுள்ளார்.

2 /7

நடிகை சாய் பல்லவி தனது ட்விட்டர் பக்கத்தில் “இந்த பாடலைக் கேட்டதிலிருந்து நான் மெய்மறந்து நடனமாடுகிறேன்” என்று உற்சாகமுடன் பதிவிட்டுள்ளார்.  

3 /7

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் “இந்தப் பாடல் அருமையாக உள்ளது. இண்டிபெண்டண்ட் இசையில் நடக்கவிருக்கும் பெரிய விஷயங்களின் தொடக்கமாக இருக்கும்” என்று பாராட்டியுள்ளார்.

4 /7

What a song ! #enjoyenjami and what making ! Loved it ! Congrats #dhee and #arivu and the whole team 

5 /7

உலகத்தர படைப்பு. பாராட்டுக்கள்!

6 /7

Happy to share the maiden release of @joinmaajja - Enjoy Enjaami, the first independent song of @talktodhee featuring @therukuralarivu is now out, check it out: https://t.co/aqKfC1OtVN @yaallfest @studiomoca — A.R.Rahman (@arrahman) March 7, 2021

7 /7

SONG OF THE YEAR ALERT! My prodigious baby sister @talktodhee burns it up with the once in a generation rapper poet @TherukuralArivu in #EnjoyEnjaami. Love you @Music_Santhosh. This track is ear fire. https://t.co/tf3utIuXOb Our future is speaking to us. Let's listen.  — Siddharth (@Actor_Siddharth) March 11, 2021