மைக்கேல் ஜாக்சன் கெட்டப்பில் தனுஷ்... வெளியானது ஜகமே தந்திரத்தின் ‘புஜ்ஜி’ பாடல்!!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் படத்தின் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகி உள்ளது..!

Last Updated : Nov 13, 2020, 10:37 AM IST
மைக்கேல் ஜாக்சன் கெட்டப்பில் தனுஷ்... வெளியானது ஜகமே தந்திரத்தின் ‘புஜ்ஜி’ பாடல்!!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் ஜகமே தந்திரம் படத்தின் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகி உள்ளது..!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷின் 40-வது படமாக உருவாகி வரும் படம் ‘ஜகமே தந்திரம்’. ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மே மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இத்திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப் போயுள்ளது.

தனுஷ், கார்த்திக் சுப்புராஜ் கூட்டணி முதல்முறை இணைவதால் இந்தப் படத்துக்கு ஆரம்பம் முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இதை உறுதிபடுத்தும் விதமாக மோஷன் போஸ்டர், சிங்கிள் டிராக் என இந்தப் படத்தின் அத்தனை முன்னோட்டங்களும் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டன.

ALSO READ | மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'மாஸ்டர்' படத்தின் மாஸ் அப்டேட் இங்கே, ரசிகர்கள் உற்சாகம்!

கடந்த நவம்பர் 9 ஆம் தேதி புஜ்ஜி பாடல் 13 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்தார் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து, இன்று காலை 9 மணிக்கு புஜ்ஜி பாடல் சோனி மியூசிக்கில் வெளியாகியுள்ளது. என்னை மட்டும் லவ் யூ சொல்லு புஜ்ஜி, என்னை மட்டும் டார்லிங் சொல்லு புஜ்ஜி, என்னை மட்டும் கிள்ளி வையி புஜ்ஜி, என்னை மட்டும் பாலோவ் பண்ணு புஜ்ஜி" என்ற பாடல் வரிகள் காதலர்களின் ரொமான்ஸ் டியூன் ஆகியுள்ளது.

கேட்க பாப் சாங் போல் இருக்கும் இப்பாடலை சந்தோஷ் நாராயணனும் அனிருத்தும் போட்டிப்போட்டுக்கொண்டு பாடியுள்ளனர். பாப் பாடல் போல் இருப்பதால், தனுஷ் மைக்கேல் ஜாக்சன் கெட்டப்பில் மட்டுமல்ல நடனத்திலும் தெறிக்கவிட்டுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகியுள்ள இப்பாடலை தனுஷ் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

More Stories

Trending News