ஓவியம் வரைவது என்பது மிகப்பெரிய கலை. அந்தக் கலையை கற்றுத் தேர்ந்தவர்கள் ஒரு சிலையோ அல்லது உருவமோ என எதுவாக இருந்தாலும் தத்ரூபமாக வரைந்துவிடுவார்கள். ஆரம்ப காலகட்டத்தில் இருந்ததை விட இப்போது ஓவியங்கள் பல வடிவங்களையும், பல பரிமாணங்களையும் பெற்றுவிட்டது. டிஜிட்டலில் 3டி, 5டி என வரைகலைகள் எல்லாம் கற்பனை செய்யா முடியா அளவுக்கு வளர்ந்துவிட்டன. ஆனால், கை வண்ணத்தில் வரையும் ஓவியங்களுக்கு ஒரு ரசனையும், உயிரும் உண்டு என நம்புபவர்கள் சிலர் உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | படமெடுக்கும் பாம்பை பார்த்திருக்கலாம்: நடிக்கும் நாகப்பாம்பை பார்த்ததுண்டா


அப்படி, கை வண்ண ஓவியத்தில் கற்றுத் தேர்ந்த பெண் ஒருவர் அநாயசமாக சிறுத்தை ஒன்றை காலி சுவற்றில் வரையும் வீடியோ காண்போரை வெகுவாக ரசிக்க வைக்கிறது. அவர் வரையும் ஸ்டைல் கட்டிப் போட்டுவிடுகிறது. அந்த வீடியோவில், பெண் ஒருவர் சுவர் மீது ஒட்டப்பட்ட வெள்ளைத் தாளில், வட்டவடிவில் பக்கெட்டை பொருத்தியிருக்கிறார். பின்னர், கருப்பு நிற பெயிண்டை எடுத்து அந்த பேப்பர் மீது ஊற்றுகிறார். அந்த பக்கெட் பகுதி மட்டும் வெள்ளையாக இருக்க, மற்ற பகுதிகளில் கருப்பு நிறத்திலான வண்ணத்தை ஒழுங்கு செய்கிறார்.



அதனை முடித்தவுடன் அந்த பக்கெட்டை தூக்கிவீசுகிறார். பக்கெட் இருந்த இடம் மட்டும் வெள்ளையாக இருக்கிறது. அந்த பகுதியில் வண்ணக் கோலைக் கொண்டு புலியை வரைகிறார். அவர் வரையும்போதே தெரிந்துவிடுகிறது அது கம்பீரமாகவும், ஆக்ரோஷமாகவும் இருக்கும் என்று. எதிர்பார்த்ததுபோலவே, அந்த பெண் கலைஞர் ஓவியத்தை வரைந்து முடித்தவுடன் நெஞ்சத்தை அச்சுறுத்தும் வகையில் புலி உருவம் தோன்றுகிறது. அதுவும் தத்ரூபமாக இருக்கிறது. இந்த வீடியோவை மட்டும் சுமார் 15 மில்லியன் பேர் டிவிட்டரில் பார்த்து ரசித்துள்ளனர்.   


மேலும் படிக்க | மலைப்பாம்பா இருந்தா மலைச்சு போயிடுவேனா: கடித்துக் குதறும் முதலை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR


<iframe allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen="" frameborder="0" height="350" src= https://zeenews.india.com/tamil/live-tv/embed?autoplay=1&mute=1  width="100%"></iframe>