மலைப்பாம்பா இருந்தா மலைச்சு போயிடுவேனா: கடித்துக் குதறும் முதலை

சமூக ஊடகங்களில் வைரலாகும் சண்டை வீடியோக்களில் அதிகம் லைக்குகளைப் பெறுவது விலங்குகளின் வீடியோக்கள் தான்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 6, 2022, 01:52 PM IST
  • தண்ணீருக்குள் சண்டை
  • மலைப்பாம்பையே மலைக்க வைத்த முதலை
  • ஜெயித்தது பாம்பா முதலையா?
மலைப்பாம்பா இருந்தா மலைச்சு போயிடுவேனா: கடித்துக் குதறும் முதலை title=

சமூக ஊடகங்களில் வைரலாகும் சண்டை வீடியோக்களில் அதிகம் லைக்குகளைப் பெறுவது விலங்குகளின் வீடியோக்கள் தான்.

மனிதர்களின் சண்டைக்கும் விலங்குகளின் சண்டைக்கும் இடையில் உள்ள வித்தியாசம் தான் இதற்கு காரணமா என்றால் விடை சொல்வது கடினம்.

அதிகம் பார்க்க முடியாத சண்டைக் காட்சிகள் என்பதால் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறதா என்றால் ஆம் என்பதே பதிலாக இருக்கும்.

சரி, முதலைக்கும் மலைப்பாம்புக்கும் இடையே சண்டை வந்தால் யார் ஜெயிப்பார்கள்? பலசாலி தான் வெற்றி பெறுவார் என்றால் முதலையே வெற்றி பெறும். ஆனால் பலம் மட்டுமே ஒரு சண்டையின் முடிவை தீர்மானிப்பதில்லை.

தண்ணீரில் நேருக்கு நேர் மோதும் பாம்பு-முதலை சண்டை வீடியோ புல்லரிக்க வைக்கிறது. பாம்பின் வீடியோ சண்டைக் காட்சியைக் கண்டு அதிர்ந்து போகாமல் இருக்க முடியாது. ஆனால் யார் வெற்றி பெற்றது என்பதை தெரிந்துக் கொள்வதற்கு வீடியோவை பார்க்க வேண்டும்.

திடீரென ஒரு முதலையும் மலைப்பாம்பும் ஆற்றில் நேருக்கு நேர் வருவதை இந்த வீடியோவில் காணலாம். உடனே முதலையுடன் மல்யுத்தத்தைத் தொடங்கிவிட்டது மலைப்பாம்பு. சும்மா அதிருதில்ல - என்று சொல்ல வைக்கும் இந்த வீடியோ அதிர்ச்சிக்கும் பஞ்சம் வைக்கவில்லை.

மலைப்பாம்பு நிலத்திலும் தண்ணீரிலும் மிகவும் ஆபத்தானது என்பது உண்மையான விஷயம். நீர்வாழ் உயிரினங்களை நொடிப்பொழுதில் தனது இரையாக்கும் மலைப்பாம்பு, தரையிலும் சண்டை போடுவதில் சளைத்ததில்லை.

மலைப்பாம்பு மற்ற விலங்குகளை விழுங்குவதை நாம் பார்த்திருக்கிறோம். மலைப்பாம்பு தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிறது.

மேலும் படிக்க | படமெடுக்கும் பாம்பை பார்த்திருக்கலாம்: நடிக்கும் நாகப்பாம்பை பார்த்ததுண்டா

முதலையுடன் சண்டையிடும் மலைப்பாம்பின் வீடியோக் காட்சிகள் வெளியாகி, பிரமிப்பை ஏற்படுத்துகிறது. மலைப்பாம்பு தனக்கான இரையைத் தேடி ஆற்றில் இறங்கியிருக்கலாம். அதற்கு தீனி போடுவதற்காக, முதலை அங்கு வந்ததோ என்னவோ தெரியவில்லை.

மலைப்பாம்பு மற்றும் முதலை சண்டை

வைரலாகி வரும் இந்த வீடியோவில், மலைப்பாம்பு மற்றும் முதலை எப்படி திடீரென தண்ணீரில் நேருக்கு நேர் சந்திக்கின்றன என்பதை காணலாம். ஆக்ரோஷமாக சண்டையிடும் மனநிலையில் காணப்படும் இந்த சக்தி வாய்ந்த இரண்டும் மல்யுத்த மகான்களாக மாறுகின்றன.

மலைப்பாம்பு (Snake Video) தனது உடலால் முதலையை சுற்றி வளைக்க முயற்சிக்கிறது. மறுபுறம், முதலை அதன் கூர்மையான தாடைகளில் மலைப்பாம்பை கடித்து அடக்குகிறது. இருவருக்கும் இடையே நடக்கும் இந்த போர் பார்ப்பதற்கு மிகவும் சுவாரசியமானதாக தெரிகிறது. 

மேலும் படிக்க | சமையல்காரரின் கைவண்ணத்தில் வைரலாகும் பாம்பு வீடியோ

முதலை கை ஓங்கியிருந்தது
மலைப்பாம்பின் கை ஓங்கியிருப்பதை இந்த வீடியோவில் காணலாம். வீடியோவைப் பார்த்த நெட்டிசன்களும் இதையே சொல்கின்றனர். இறுதியில் முதலை, மலைப்பாம்பை இரண்டு துண்டுகளாக கடித்து துப்பியிருக்கலாம் என்று நம்புகிறார்கள். 

இந்த வீடியோ விலங்குகள்.எனர்ஜி என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த கோரமான சண்டையை பார்த்த ஒரு பயனர், 'பாம்பு பிழைக்க வாய்ப்பில்லை' என்று எழுதியுள்ளார். மற்றொரு நபர், 'இந்தச் சண்டையில் முதலை வெல்லும்' என்று எழுதுகிறார். 

இந்த மலைப்பாம்பு - முதலை மல்யுத்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது.

மேலும் படிக்க | நாகப்பாம்பை குளிப்பாட்டி குஷிப்படுத்திய நபர்: அதிசய வைக்கும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News